3வது நாளாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.600 குறைந்து விற்பனை.. வெள்ளி விலை நிலவரம் என்ன?
Gold And Silver Price: ஆகஸ்ட் 28ஆம் தேதியான இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை மேலும் ரூ.75 குறைந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் ரூ.600 குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,650-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் 28, 2026: சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.75 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தங்கத்தின் விலை மீண்டும் ஒரு கிராம் ரூ.15,000-க்கு கீழ் குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 27ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 குறைந்ததுடன், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்:
இந்நிலையில், ஆகஸ்ட் 28ஆம் தேதியான இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை மேலும் ரூ.75 குறைந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் ரூ.600 குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,650-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.15,982-க்கும், ஒரு சவரன் ரூ.1,26,856-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
மேலும் படிக்க: ரேஷன் இகேஒய்சி செய்ய கவலை வேண்டாம்.. தமிழ்நாடு முழுவதும் முகாம் நடத்தும் அரசு.. எப்போது?
கடந்த வாரத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.260 ஆகக் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மீண்டும் உயருமா தங்கம் விலை?
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம், உலகப் பொருளாதாரத்தில் நிலவும் சீரற்ற சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: தினமும் ரூ.10க்கு கூலி வேலை பார்த்த சிறுவன்… இன்று ரூ.681 கோடி வருவாய் ஈட்டும் தொழிலதிபர்- யார் இந்த முஸ்தபா?
இருப்பினும், 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தங்கத்தின் விலை மீண்டும் கிடுகிடுவென உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.