ரேஷன் இகேஒய்சி செய்ய கவலை வேண்டாம்.. தமிழ்நாடு முழுவதும் முகாம் நடத்தும் அரசு.. எப்போது?
Ration Card eKYC | ரேஷன் கார்டில் இலவச அரிசியை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் பயனர்கள் கட்டாயம் இகேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், ரேஷன் கார்டில் ஒகேஒய்சி மேற்கொள்ள அரசு ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பொதுமக்களுக்கான முக்கிய ஆவணங்களுக்கு இகேஒய்சி (eKYC – Know Your Customer) கட்டாயமாக உள்ளது. மோசடிகள் நடைபெறுவதை தடுக்கவும், தகுதி உள்ள பயனர்கள் மட்டும் சேவைகளை பெறவும் அரசு இந்த இகேஒய்சியை கட்டாயமாக வைத்துள்ளது. கேஸ் சிலிண்டர்கள் முதல் ரேஷன் கார்டு (Ration Card) வரை பலவற்றுக்கும் இகேஒய்சி கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், ரேஷன் அட்டையில் இகேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் இலவச அரிசி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரேஷன் கார்டுக்கு இகேஒய்சி மேற்கொள்ள தமிழகத்தில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுக்கு இகேஒய்சியை கட்டாயமாக வைத்துள்ள அரசு
ரேஷன் அட்டை மூலம் குடும்பங்களுக்கு மாணிய விலையில் எண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 35 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இலவச அரிசியை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் ரேஷன் கார்டு பயனர்கள் இகேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இதையும் படிங்க : RD, SIP மற்றும் PPF.. இவற்றில் எதில் ரூ.100 முதலீடு செய்வது சிறந்த லாபத்தை தரும்?




ஆகஸ்ட் 29 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள்
பயனர்கள் ரேஷன் கார்டு கேஒய்சியை அருகில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மேற்கொள்ளலாம். இதற்காக பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டபோதும், சிலர் இன்னும் இகேஒய்சி மேற்கொள்ளாமல் உள்ளனர். அவர்களுக்கான ஒரு சிறப்பு வாய்ப்பை தான் அரசு தற்போது வழங்கியுள்ளது. அதாவது, ஆகஸ்ட் 29, 2026 அன்று ரேஷன் கார்டு இகேஒய்சி மேற்கொள்ள சிறப்பு முகாமை அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த முகாம்கள் நடைபெறும்.
இதையும் படிங்க : சிபில் ஸ்கோரை கடுமையாக பாதிக்கும் அம்சங்கள்.. இந்த விஷயங்களில் உஷாராக இருங்கள்!
ரேஷன் கார்டில் உள்ள போலியான பெயர்களை நீக்கம் செய்யவும், தகுதியான பயனர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் சென்று சேருவதை உறுதி செய்யவும் இந்த முறையை அரசு கையில் எடுத்துள்ளது. இதுவரை 96.21 சதவீத பயனர்கள் தங்களது ரேஷன் கார்டுகளுக்கு இகேஒய்சி முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.