AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

RD, SIP மற்றும் PPF.. இவற்றில் எதில் ரூ.100 முதலீடு செய்வது சிறந்த லாபத்தை தரும்?

RD, SIP and PPF Investment Scheme | வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், ஆர்டி, எஸ்ஐபி மற்றும் பிபிஎஃப் இவற்றில் எதில் முதலீடு செய்வது அதிக லாபத்தை தரும் என பார்க்கலாம்.

RD, SIP மற்றும் PPF.. இவற்றில் எதில் ரூ.100 முதலீடு செய்வது சிறந்த லாபத்தை தரும்?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 25 Aug 2026 20:05 PM IST

மனிதர்களுக்கு சேமிப்பு (Saving) மற்றும் முதலீடு (Investment) மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்யவில்லை என்றால், எதிர்காலத்தில் ஏற்படும் நிதி சிக்கல்களில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படும். எனவேதான், சிறிய தொகையாக இருந்தாலும் கூட சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என  பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். சேமிக்க பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளன. அவற்றில் எதனை தேர்வு செய்கிறோம் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இந்த நிலையில், நீங்கள் ரூ.100 முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்கள். இந்த நிலையில், ஆர்டி (RD – Recurring Deposit), எஸ்ஐபி (SIP – Systematic Investment Plan) மற்றும் பிபிஎஃப் (PPF – Public Provident Fund) இவற்றில் எந்த திட்டத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு சிறந்த லாபத்தை கொடுக்கும் என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

தொடர் வைப்பு நிதி திட்டம்

இந்த திட்டம் வங்கிகள் மற்றும் அஞ்சலங்களில் செயல்படுத்தப்படுகிறது. தினசரி சிறிய அளவிலான தொகையை முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு வங்கிகள் 6 முதல் 7 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. இந்த நிலையில், இந்த திட்டத்தில் தினசரி ரூ.100 அல்லது வாரத்திற்கு ரூ.700 என முதலீடு செய்து சிறந்த பலன்களை பெறலாம்.

இதையும் படிங்க : ஆதார் கார்டில் எத்தனை முறை முகவரியை மாற்றம் செய்யலாம்.. UIDAI விதிகள் கூறுவது என்ன?

பரஸ்பர நிதி

தற்போதைய காலக்கட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் இந்த பரஸ்பர நிதி திட்டத்தில் தான் பலரும் முதலீடு செய்கின்றனர். இதில், தினசரி எஸ்ஐபி என்ற Systematic Investment Plan வசதி உள்ளது. இதன் மூலம் நீங்கள் தினசரி முதலீடு செய்ய முடியும். இந்த தினசரி முதலீட்டுக்காக நீங்கள் வங்கிகளுக்கு சென்று பணம் செலுத்த வேண்டாம். உங்கள் வங்கி கணக்கில் இருந்து தானாக பணம் எடுத்துக்கொள்ளப்படும்.

இதையும் படிங்க : 2 தலைமுறைக்கு நிதி பாதுகாப்பை உருவாக்கலாம்.. இந்த விஷயத்தை முறையாக செய்தால் போதும்!

பொது வருங்கால வைப்பு நிதி

அதிக லாபம் தரக்கூடிய திட்டங்களில் ஒன்றாக பொது வருங்கால வைப்பு நிதி உள்ளது. தினமும் ரூ.100 செலுத்த முடியாத என்பதால் மாதம் முழுவதும் தினமும் ரூ.100 சேர்த்து வைத்து ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 முதலீடு செய்யும் பட்சத்தில் சிறந்த பலன்களை பெற முடியும். இந்த திட்டத்திற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், நல்ல லாபத்தை பெற முடியும்.

Follow Us