AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எல்பிஜி கேஸ் சிலிண்டர்களுக்கு கேஒய்சி மேற்கொள்ள இன்றே கடைசி நாள்!

Gas Cylinder eKYC | கேஸ் சிலிண்டர்களுக்கு கேஒய்சி மேற்கொண்டால் தான் தொடர்ந்து கேஸ் சிலிண்டர்களை பெற முடியும் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், அதற்கான கடைசி தேதி இன்றுடன் நிறைவடைய உள்ளது. மேலும் தேதி நீட்டிக்கப்படுவது குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

எல்பிஜி கேஸ் சிலிண்டர்களுக்கு கேஒய்சி மேற்கொள்ள இன்றே கடைசி நாள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 23 Aug 2026 14:46 PM IST

இந்தியாவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) இணைப்பு வைத்துள்ளவர்கள் கேஒய்சி (KYC – Know Your Customer) மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஒருவேளை கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்கள் கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால், அவர்களுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படாது என அரசு கூறியுள்ளது. இந்த நிலையில், கேஒய்சி மேற்கொள்ள இன்று (ஆகஸ்ட் 23, 2026) கடைசி தேதியாக உள்ளது. கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்கள் இன்றுக்குள் கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் இனி கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காது.

கேஸ் சிலிண்டர் பெற கேஒய்சி கட்டாயம்

இந்தியா தனது எல்பிஜி தேவைக்கு வளைகுடா நாடுகளையே நம்பியுள்ளது. இதன் காரணமாக ஈரான் போரின்போது ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையில், எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல முடியாமல் போனது. அதன் காரணமாக இந்தியா மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடை சந்தித்தது. அப்போது அனைத்து குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர்கள் முறையாக சென்று சேரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிங்க : மின்சார வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. 20 ஆயிரம் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்.. அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார்!

அந்த வகையில் தான் கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள அனைவரும் கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. கேஸ் சிலிண்டர்களை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் இல்லை என்றால் கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காது என்று அரசு அறிவித்தது. இதற்கான கடைசி தேதியாக ஆகஸ்ட் 15, 2026 இருந்த நிலையில், அது ஆகஸ்ட் 23, 2026 ஆக நீட்டிக்கப்பட்டது.

கேஸ் சிலிண்டர்களுக்கு கேஒய்சி மேற்கொள்ள இன்றே கடைசி நாள்

இந்த நிலையில், இன்றுடன் கேஸ் சிலிண்டர்களுக்கு கேஒய்சி மேற்கொள்வதற்கான கடைசி தேதி நிறைவடைகிறது.

கேஒய்சி மேற்கொள்வது எப்படி?

  1. நீங்கள் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் நிறுவனத்தின் செயலியை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.
  2. அதேபோல Aadhaar FaceRD செயலியையும் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.
  3. பிறகு கேஸ் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும்.
  4. தற்போது முகப்பு பக்கத்தில் உள்ள LPG e-KYC என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  5. அதில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை படித்து ஒப்புதல் அளித்து பிறகு முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும்.
  6. முகத்தை ஸ்கேன் செய்து முடித்ததும், e-KYC விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் ஏற்றுக்கொள்ளப்படும்.

Follow Us