AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Weather Alert: நாளை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu weather tomorrow : தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளி மண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த பாதை நிலவுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Weather Alert: நாளை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Aug 2026 15:05 PM IST

சென்னை, ஆகஸ்ட் 23 : தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளி மண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுதாகாவும் இதன் காரணமாக ஆகஸ்ட் 24, 2026 நாளை கோவை மாவட்டமலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நாளை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளி மண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த பாதை நிலவுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் சென்னை,செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட் 23, 2026 இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : காங்கிரஸ் இல்லையெனில் தவெக கதை முடிந்திருக்கும்.. மாணிக்கம் தாகூர் ஆவேசம்!

மேலும் அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 24, 2026 நாளை கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும் நீலகிரி மாவட்டத்திலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சு, கடலர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடமேற்கு வங்கக்கடலில் ஆகஸ்ட் 23, 2026 இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பாதை உருவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : சென்னையில் வீட்டில் தூங்கிய சிறுமி.. 2 முறை கடித்த நல்ல பாம்பு.. அடுத்து நடந்த விபரீதம்!

மேலும் மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளிலும், கடலுக்கு அப்பாலும் வரும் ஆகஸ்ட் 24, 2026 வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், மேற்கு வங்கம் முதல் ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அருணாச்சலப் பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயா, கடலோர கர்நாடகா, கிழக்கு உத்தரப் பிரதேசம், கங்கை சமவெளி மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், கேரளா மற்றும் மாஹே, மத்தியப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா, தெற்கு உள் கர்நாடகா, தெலங்கானா, உத்தரகாண்ட் மற்றும் விதர்பா ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

Follow Us