காங்கிரஸ் இல்லையெனில் தவெக கதை முடிந்திருக்கும்.. மாணிக்கம் தாகூர் ஆவேசம்!
Congress Leader Manickam Tagore : காங்கிரஸ் கட்சி இல்லையெனில் தமிழக வெற்றி க் கழகம் இரண்டாக உ டைக்கப்பட்டு கதையை முடிக்கப்பட்டிருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம். பி. பரபரப்பு கருத்தை தெரிவித்தார் .
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இல்லையெனில் தமிழக வெற்றி கழகத்தின் கதையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முடித்திருப்பார் என்று காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்துக்கு எப்போது எம்பிக்கள் கிடக்கிறார்களோ அப்போது, இந்தியா கூட்டணியில் தமிழக வெற்றி கழகத்தை இணைத்துக் கொள்ள வலியுறுத்துவோம். தற்போதைய சூழ்நிலையில், தமிழக வெற்றி கழகத்திற்கு எம்பிக்கள் இல்லாததால் அவர்களை இந்தியா கூட்டணியில் இணையுமாறு சொல்ல முடியாது. அந்த கட்சிக்கு தற்போது வரை எம்பிக்கள் இல்லை. எம்பிக்கள் இருக்கும் பட்சத்தில் இந்தியா கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என்று தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றிபெற்றவுடன் ராகுல்காந்தியை தொடர்பு கொண்டார்
மேலும் இந்தியா கூட்டணியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்த்துக் கொள்ளாத காரணத்தால் தான் தற்போது வரை முதல்வர் விஜய் ராகுல் காந்தியை பிரதமர் என முன்மொழியவில்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு தேர்தல் நெருங்கட்டும். முதலில் ஜோசப் விஜய் அவர்கள் தேர்தலில் 106 தொகுதிகளை பிடித்து வெற்றி பெற்ற பிறகு முதலில் அவர் காங்கிரஸ் தேசிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு தான் முதன் முதலாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
மேலும் படிக்க: 70 வயது லிமிட்.. 3 முறை ரூல்.. திமுகவில் தூக்கப்படும் மாவட்ட செயலாளர்கள்.. யார் அந்த 13 பேர்?




தவெகவுக்கு முதல் ஆதரவு கொடுத்தது காங்கிரஸ்
மேலும், அவர் முதல்வராக பதவி ஏற்பதற்கு ராகுல் காந்தியிடம் தான் ஆதரவும் கேட்டார். அதன்படி, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சிதான் முதல் ஆதரவு கடிதம் கொடுத்தது. இந்த உண்மை தமிழக வெற்றி கழகத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும் தெரியும். அவர்களெல்லாம் அமைச்சர்கள் ஆவதற்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு முதலில் வந்தது. இல்லை எனில், மத்திய உள்துறை அமித் ஷா அனைவரின் கதையையும் முடித்திருப்பார்.
தவெகவை இரண்டாக உடைத்திருப்பார்
இந்த நேரம் தமிழக வெற்றி கழகத்தை உடைத்து, அண்ணன் எடப்பாடி பழனிசாமியை முதல்- அமைச்சராக ஆக்கி இருப்பார். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை இந்த நிலை அனைவருக்கும் தெரியும். தேர்தல் நெருங்கட்டும். முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் எப்போதும் குறைவாகவே பேசுவார். எனவே, பேச வேண்டிய நேரத்தில் அவர் சரியாக பேசுவார் என்று மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்தார்.
மேலும் படிக்க: செங்கல்பட்டு இளைஞர் கொடூர கொலை.. தவெகவில் இருந்து தந்தை- மகன் நீக்கம்!