தூத்துக்குடியில் அதிர்ச்சி.. நகைக்கடை உரிமையாளரிடம் சிக்கிய ரூ.10.30 கோடி ஹவாலா பணம்? பின்னணியில் பேரதிர்ச்சி!
Income Tax Officials Seized Rs. 10.30 Crore: தூத்துக்குடி மாவட்டத்தில் நகைக் கடை உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 1.30 கோடியும், போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 9 கோடியும் என ரூ.10.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி மண்டல துணை காவல் ஆணையர் நாராயணனுக்கு, வருமான வரித்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ், கோடிக்கணக்கில் பணம் கொண்டு செல்லப்படுவதாக ரகசிய தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பிரதான சாலை, வீரசந்திரா சிக்னல் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 18- ஆம் தேதி இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில், காரில் இரு பெட்டிகள் இருந்தன. அவற்றை போலீசார் சோதனை செய்தது கட் கட்டப்பட்ட பணம் இருப்பது தெரியவந்தது. அதை எண்ணியதில் ரூ. 9 கோடி ரொக்கம் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காரில் வந்தவர்களிடம் உரிய ஆவணங்களை போலீசார் கேட்டனர்.
நகைக் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.1.30 கோடி பறிமுதல்
ஆனால், அவர்களிடம் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து, காரில் வந்த சச்சின் என்பவர் உள்பட 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், அவர்கள் கொண்டு வந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனிடையே, தூத்துக்குடியில் உள்ள சச்சினின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, அவரது வீட்டில் இருந்து ரூ. 1 கோடியை 30 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க: பரமக்குடியில் பரபரப்பு.. காவல் துணை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்… காவல்துறையில் பெரும் ஷாக்!




வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
இது தொடர்பாக, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காகவே வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.9 கோடி ரொக்கத்துடன் காரில் பெங்களூருக்கு தப்பி செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சச்சின் உள்ளிட்ட இருவர் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 9 கோடி நோக்கம் மற்றும் கார் ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் ஒப்படைத்தனர்.
ஹவாலா பணமா என வருமானத்துறை விசாரணை
வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.10 கோடியை 30 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த பணமானது ஹவாலா முறையிலானதா என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: நெல்லையில் பரபரப்பு.. பெண் அளித்த ஒற்றை புகார்.. தூக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்.. அதிரடி காட்டிய DIG!