AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தூத்துக்குடி – நரசாபூர் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும்?

Thoothukudi Narasapur Special Trains : தூத்துக்குடி - ஆந்திராவின் நரசாபூர் இடையே சிறப்பு ரயில் செப்டம்பர் 7, 2026 முதல் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 22, 2026 இன்று முதல் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி – நரசாபூர் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும்?
சிறப்பு ரயில்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Aug 2026 21:32 PM IST

சென்னை, ஆகஸ்ட் 22 : தூத்துக்குடி – ஆந்திராவின் நரசாபூர் இடையே சிறப்பு ரயில் செப்டம்பர் 7, 2026 முதல் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 22, 2026 இன்று முதல் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தூத்துக்குடி மற்றும் ஆந்திர மாநிலம் நரசாபூர் இடையே 4 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்லன. இந்த ரயில்கள் தூத்துக்குடியில் தொடங்கி தமிழ்நாட்டின் பெரும்பாலான ரயில் நிலையங்களை நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி – நரசாபூர் இடையே சிறப்பு ரயில்

தூத்த்துக்குடி – நரசாபூர் இடையே 06019 என்ற வண்டி எண் கொண்ட சிறப்பு ரயில் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 7, 14, 28 ஆகிய திங்கட்கிழமைகளில் தூத்துக்குடியில் இரு்து இரவு 11:20 மணிக்கு புறப்பட்டு, 3வது நாள் அதிகாலை 12.20 மணிக்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மொத்தம் 4 சேவைகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான சுற்றறிக்கை: கல்வி இணை இயக்குனர்- வட்டாட்சியருக்கு நோட்டீஸ்!

அதே போல மறுமார்க்கத்தில் 06020 என்ற வண்டி எண் கொண்ட சிறப்பு ரயில் நரசாபூர், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 9, 16,23,30 ஆகிய புதன்கிழமைகளில் நரசாபூரில் இருந்து அதிகாலை 4 மணிக்கு கிளம்பி அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நின்று செல்லும் சிறப்பு ரயில் நிலையங்கள்

இந்த ரயில்கள் தூத்துக்குடி, துடிமெலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், நெல்லூர், ஓங்கோல், சிராலா, பாபட்லா, தெனாலி, விஜயவாடா, குடிவாடா, கைகலூர், அகிவிடு, பீமவரம் டவுன் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் இந்த ரயில் அதிகாலை 2 மணிக்கு மதுரையை வந்தடையும், பின்னர் அங்கிருந்து 2.05 மணிக்கு புரப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பிற்பகல் 1 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. வண்டலூர் பட்டாம்பூச்சி பூங்கா மீண்டும் திறப்பு… பல்வேறு அம்சங்கள் புதுப்பிப்பு!

மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரயில் அதிகாலை 1.20 மணிக்கு மதுரை வந்தடைந்து 1.25 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் மறுமார்க்கத்தில் நரசாபூரில் இருந்து கிளம்பி தூத்துக்குடி நோக்கி செல்லும் போது பிற்பகல் 3மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்றும் அங்கிருந்து சரியாக 3.15 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலின் முன்பதிவு ஆகஸ்ட் 22, 2026 இன்று துவங்கியுள்ளது.

Follow Us