AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Weather Alert: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை – வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu weather today : தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 22 மற்றும் ஆகஸ்ட் 23 ஆகிய 2 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tamil Nadu Weather Alert: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை  – வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Aug 2026 16:08 PM IST

சென்னை, ஆகஸ்ட் 22 : தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாகவும், தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 22, 2026 இன்று செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை

இது தொடர்பாக வானலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 22, 2026 இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “திமுகவில் வயது வரம்பு அதிரடி!”.. 13 மாவட்டச் செயலாளர்கள் பதவிக்குச் செக்.. மு.க.ஸ்டாலின் அதிரடி!!

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 23, 2026 நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 24, 2026 ஓரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

இதையும் படிக்க : “மாணவர் உரிமைகளைப் பறிப்பதா?” – தமிழ்நாடு தலைமைச் செயலரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி ஆர்ப்பாட்டம்!

மேலும், வருகிற ஆகஸ்ட் 25, 2026 கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் ஆகஸ்ட் 26, 2026 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வரும் ஆகஸ்ட் 27, 28, 2026 ஆகிய 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Follow Us