AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அவைகுறிப்பில் நீக்கியதை ரீல்ஸாக வெளியிட்டால் கடும் நடவடிக்கை!”.. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரிக்கை!!

Speaker JCD Prabhakar Warns: சட்டப்பேரவை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட உரை மற்றும் நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் கடிதங்கள் தனது பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அவைகுறிப்பில் நீக்கியதை ரீல்ஸாக வெளியிட்டால் கடும் நடவடிக்கை!”.. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரிக்கை!!
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 22 Aug 2026 11:15 AM IST

சென்னை, ஆகஸ்ட் 22: சட்டமன்றத்தின் மாண்பையும், ஜனநாயக மரபுகளையும் பாதுகாப்பது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் மற்றும் ஊடகங்களின் தலையாய கடமையாகும். சட்டமன்ற அவைக் கூட்டங்களின் போது, பேரவை விதிகளுக்கு மாறாகப் பேசப்படும் கருத்துகளோ அல்லது நீக்கப்படும் உரைகளோ அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகரால் முறைப்படி நீக்கப்படுவது வழக்கமான நடைமுறையாகும். அவ்வாறு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் விவாதங்கள் மற்றும் காட்சிகளை, சமூக வலைதளங்களின் பரவலான பயன்பாட்டைக் கொண்டு ‘ரீல்ஸ்’ வடிவத்திலோ அல்லது பிற காணொளிகளாகவோ வெளியிடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலை குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க: “திமுகவில் அதிரடி மாற்றங்கள்!”.. மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடும் அவசரச் செயற்குழு கூட்டம்!!

சபாநாயகர் விடுத்த கடும் எச்சரிக்கை:

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், பேரவை விதிகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். சட்டமன்ற அவைக் கூட்டத்தில் பேசப்படும் சில கருத்துகள் அல்லது பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவற்றை எவ்விதத்திலும் ஊடகங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ பரப்புவது அவையின் மாண்பைக் குறைக்கும் செயலாகும். அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டவற்றை எடுத்து, எந்த வகையில் பயன்படுத்தினாலும் அது அவையின் மாண்பைக் குறைப்பதாகவும், சட்ட விதிகளையும் பேரவை விதிகளையும் மீறுவதாகவும் அமையும் என்று அவர் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டார்.

உரிமை மீறல் கடிதம் ஆய்வில்:

சட்டப்பேரவையில் அவைக்குறிப்பில் நீக்கப்பட்ட உரைகள் மற்றும் சம்பவங்களை ரீல்ஸ்களாக சமூக வலைதளங்களில் பகிர்வது தொடர்பாக ஏற்கனவே உரிமை மீறல் பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் கடிதங்கள் தற்போது தனது ஆய்வில் உள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். பேரவை விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து இந்த ஆய்வின் முடிவில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: வாரவிடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா?அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!

கண்ணியத்தை பேணுவது அவசியம்:

முன்னதாக, நேற்றைய தினம் சட்டப்பேரவையின் போது, எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் ரீல்ஸாக சமூக வலைதளங்களில் வருவது குறித்து பேரவைத் தலைவரிடம் முறையிட்டார். அவைத்தலைவரும், அவ்வாறு சமூக வலைதளங்களில் வலம் வரும் சம்பவத்தை தனக்கு சமர்பிக்கும் படி கூறியதோடு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். சமூக வலைதளங்களின் விரைவான வளர்ச்சிக்கு மத்தியில், சட்டமன்ற நடவடிக்கைகளின் கண்ணியத்தைப் பேணுவது அவசியமாகிறது. அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்வது குறித்து சபாநாயகர் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை, பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஊடகப் பயனர்களிடையே பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

Follow Us