AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓடும் பேருந்தில் தூக்கு போட்டு உயிரிழந்த முதியவர்.. நெல்லை பரபரப்பு சம்பவம்!

Old Man Killed Himself In Running Bus | திருநெல்வேலியில், சாலையில் சென்றுக்கொண்டு இருந்த பேருந்தில் முதியவர் தூக்குப்போட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்த நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓடும் பேருந்தில் தூக்கு போட்டு உயிரிழந்த முதியவர்.. நெல்லை பரபரப்பு சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Aug 2026 08:16 AM IST

திருநெல்வேலி, ஆகஸ்ட் 22 : திருநெல்வேலியில் (Tirunelveli) ஓடும் பேருந்தில் முதியவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுக்கை வசதி கொண்ட பேருந்தில் முதியவர் பயணம் செய்த நிலையில், காலையில் நடத்துனர் பேருந்தின் மின்விலக்கை எரியவிட்ட நிலையில், முதியவர் தூக்கில் தொங்கியபடி சடலாமாக கிடந்ததை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இது பேருந்தில் இருந்த சக பயணிகளையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த சோக சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பேருந்தில் பயணம் செய்தபோது விபரீத முடிவு எடுத்த முதியவர்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த படுக்கை வசதியுடன் கூடிய அரசு பேருந்து ஒன்று ஆகஸ்ட் 20, 2026 அன்று ஊட்டியில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த பேருந்து திருப்பூர் வழியாக சென்ற நிலையில், அங்கு முதியவர் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து அந்த இடத்தில் இருந்து புறப்பட்டதும், மின் விலக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளன. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் தூங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : ரூ.45 ஆயிரம் லஞ்சம்.. திருப்பூர் கூட்டுறவு செயலர் உள்பட மூவர் கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் பொறியில் சிக்கிய பரபர சம்பவம்!

தூக்கில் சடலமாக தொங்கிய முதிவர் – அதிர்ச்சியில் உறைந்த நடத்துனர்

பேருந்து நேற்று (ஆகஸ்ட் 21, 2026) அதிகாலை 5.30 மணி அளவில் திருநெல்வேலி அருகே உள்ள கங்கை கொண்டான் பகுதிக்கு வந்தபோது, நாடத்துனர் மின் விலக்கை ஏற்றியுள்ளார். அப்போது திருப்பூரில் ஏறிய முதியவர், பேருந்தின் கடைசி படுக்கைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள இரும்பு ஏணி போன்ற அமைப்பில் உள்ள கம்பியில் தனது துண்டால் தூக்குப்போட்டு இறந்த நிலையில், சடலமாக கிடந்துள்ளார்.

இதையும் படிங்க : எம்எல்ஏக்களுக்கு கார்.. எங்களுக்கு பைக் வேண்டும்.. ஊராட்சி மன்ற தலைவர்கள் பிடிவாதம்!

தூக்கு போட்டுக்கொண்ட முதியவர் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஷாஜி கிருஷ்ணன் என்பது தெரிய வந்துள்ளது. அவரது உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Follow Us