AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வறண்ட உதடுகளா? மின்னுவதற்கு இத செய்யுங்க!

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சில பழக்கங்களால் உதடுகளில் ஏற்படும் வறட்சி மற்றும் கருமையைப் போக்க வெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி ஆகியவை சிறந்த தீர்வாக அமைகின்றன. மேலும் கொத்தமல்லி சாறு, பீட்ரூட் மற்றும் மாதுளை சாறுகளைத் தவறாமல் பூசி வருவதோடு, வெதுவெதுப்பான நீர் ஒத்தடம் கொடுத்து வந்தால் உதடுகள் இயற்கையாகவே சிவந்து மென்மையாகும்.

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 22 Aug 2026 07:00 AM IST
உதடுகள் வறட்சியடைந்து காணப்படுபவர்கள் நாள்தோறும் வெண்ணெய் தடவி வரலாம்.இது வறட்சியைப் போக்கி உதடுகளை மென்மையாகவும் வழவழப்பாகவும் மாற்ற உதவுகிறது.அதேபோல தினமும் பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவுவதும் சிறந்த பலனைத் தரும்.இது உதடுகளின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து வறண்டு போவதைத் தடுக்கிறது.

உதடுகள் வறட்சியடைந்து காணப்படுபவர்கள் நாள்தோறும் வெண்ணெய் தடவி வரலாம்.இது வறட்சியைப் போக்கி உதடுகளை மென்மையாகவும் வழவழப்பாகவும் மாற்ற உதவுகிறது.அதேபோல தினமும் பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவுவதும் சிறந்த பலனைத் தரும்.இது உதடுகளின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து வறண்டு போவதைத் தடுக்கிறது.

1 / 5
உதடுகளின் கருமை நிறத்தைப் போக்க கொத்தமல்லி இலைச் சாறு பெரிதும் உதவுகிறது.
தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் கொத்தமல்லி சாற்றை உதட்டில் தடவி வரலாம்.
தேங்காய் எண்ணெயுடன் அரை டீஸ்பூன் சாதிக்காய் பொடியைக் கலந்து உதட்டில் பூசலாம்.
இவை இரண்டும் கருமையை நீக்கி உதடுகளைச் சிவப்பாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.

உதடுகளின் கருமை நிறத்தைப் போக்க கொத்தமல்லி இலைச் சாறு பெரிதும் உதவுகிறது. தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் கொத்தமல்லி சாற்றை உதட்டில் தடவி வரலாம். தேங்காய் எண்ணெயுடன் அரை டீஸ்பூன் சாதிக்காய் பொடியைக் கலந்து உதட்டில் பூசலாம். இவை இரண்டும் கருமையை நீக்கி உதடுகளைச் சிவப்பாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.

2 / 5
பீட்ரூட் பழத்தின் இயற்கைச் சாற்றை உதடுகளின் மீது தடவி வருவது நல்ல அழகைத் தரும்.
அதேபோல மாதுளம் பழத்தின் சாறையும் தொடர்ந்து உதட்டின் மேல் பூசி வரலாம்.
இவற்றில் உள்ள இயற்கை நிறமிகள் உதட்டிற்குப் பொலிவையும் சிவப்பழகையும் அளிக்கின்றன.
பக்கவிளைவுகள் ஏதுமின்றி உதடுகளைப் பராமரிக்க இவை சிறந்த இயற்கை வழிகளாகும்.

பீட்ரூட் பழத்தின் இயற்கைச் சாற்றை உதடுகளின் மீது தடவி வருவது நல்ல அழகைத் தரும். அதேபோல மாதுளம் பழத்தின் சாறையும் தொடர்ந்து உதட்டின் மேல் பூசி வரலாம். இவற்றில் உள்ள இயற்கை நிறமிகள் உதட்டிற்குப் பொலிவையும் சிவப்பழகையும் அளிக்கின்றன. பக்கவிளைவுகள் ஏதுமின்றி உதடுகளைப் பராமரிக்க இவை சிறந்த இயற்கை வழிகளாகும்.

3 / 5
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் உதடுகளுக்கு ஒத்தடம் கொடுப்பது நல்லது.
வெதுவெதுப்பான நீர் மற்றும் குளிர்ந்த நீரைக் கொண்டு மாறி மாறி ஒத்தடம் கொடுக்கலாம்.
இது உதடுகளில் உள்ள இரத்த ஓட்டத்தை அதிகரித்து உயிரோட்டத்தைத் தருகிறது.
இந்த எளிய முறை உதடுகளை ரோஜா இதழ் போல மிகவும் மென்மையாக மாற்றும்.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் உதடுகளுக்கு ஒத்தடம் கொடுப்பது நல்லது. வெதுவெதுப்பான நீர் மற்றும் குளிர்ந்த நீரைக் கொண்டு மாறி மாறி ஒத்தடம் கொடுக்கலாம். இது உதடுகளில் உள்ள இரத்த ஓட்டத்தை அதிகரித்து உயிரோட்டத்தைத் தருகிறது. இந்த எளிய முறை உதடுகளை ரோஜா இதழ் போல மிகவும் மென்மையாக மாற்றும்.

4 / 5
சிலருக்கு அடிக்கடி உதடுகளைக் கடிக்கும் தவறான பழக்கம் இருப்பது உண்டு.
இப்படி உதடைக் கடிப்பதால் உதடுகள் எளிதில் பாதிப்படைந்து சேதமடைகின்றன.
மேலும் இதனால் உதடுகள் விரைவில் வறண்டுபோய் தன் இயற்கை நிறத்தையும் இழக்கும்.
எனவே அழகிய உதடுகளைப் பெற இந்த உதடு கடிக்கும் பழக்கத்தை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

சிலருக்கு அடிக்கடி உதடுகளைக் கடிக்கும் தவறான பழக்கம் இருப்பது உண்டு. இப்படி உதடைக் கடிப்பதால் உதடுகள் எளிதில் பாதிப்படைந்து சேதமடைகின்றன. மேலும் இதனால் உதடுகள் விரைவில் வறண்டுபோய் தன் இயற்கை நிறத்தையும் இழக்கும். எனவே அழகிய உதடுகளைப் பெற இந்த உதடு கடிக்கும் பழக்கத்தை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

5 / 5
Follow Us