AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Arjun Das: விஜய் சாருக்கு அரசியலில் இன்ட்ரெஸ்ட் இருப்பதே எனக்கு தெரியாது – அர்ஜுன் தாஸ்!

Arjun Das on CM Vijays Politics: தென்னிந்திய மொழி திரைப்படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவருபவர் அர்ஜுன் தாஸ். இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் புது படம்தான் ஒன்ஸ் மோர். இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், அண்மையில் நேர்காணல் ஒன்றில் முதல்வர் விஜய் குறித்து அர்ஜுன் தாஸ் பேசியுள்ளார்.

Arjun Das: விஜய் சாருக்கு அரசியலில் இன்ட்ரெஸ்ட் இருப்பதே எனக்கு தெரியாது – அர்ஜுன் தாஸ்!
அர்ஜுன் தாஸ் மற்றும் முதல்வர் விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Aug 2026 08:24 AM IST

தமிழ் சினிமாவில் மாஸ்டர் (Master) திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் நெருக்கமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ் (Arjun das). இதையடுத்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவர் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் நடிகர் பவன் கல்யாண் (Pawan Kalyan) வரை பல்வேறு பிரபலங்களுடன் திரைப்படங்களில் இனைந்து நாடிஓத்திருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கான் சிட்டி (Con City). இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் கடந்த 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு பின், 2026ம் ஆண்டில் அர்ஜுன் தாஸின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் ஒன்ஸ் மோர் (Once More). இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அர்ஜுன் தாஸ், முதல்வர் விஜய்க்கு அரசியலில் ஆர்வம் இருந்தது தனக்கு தெரியாது என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மாபெரும் பிளாக்பஸ்டர்.. ரூ 100 கோடி கிளப்பில் இணைந்த லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படம்!

முதலமைச்சர் விஜய் குறித்து நடிகர் அர்ஜுன் தாஸ் பகிர்ந்த விஷயம்:

அந்த பேட்டியில் பேசியிருந்த நடிகர் அர்ஜுன் தாஸ், “முதல்வன் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. மற்ற படங்களுடன் ஒப்பிடுவதை விட, அதில் சித்தரிக்கப்பட்டுள்ள நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள் நம்பமுடியாதவையாகத் தோன்றுகின்றன. மாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது, சத்தியமாக விஜய் சாருக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது.

இதையும் படிங்க: வில்லியாக களமிறங்கும் ரெஜினா கசாண்ட்ரா.. எந்த படத்தில் தெரியுமா?

ஆனால் திடீரென அவர் முதலமைச்சராக ஆனா விஷயம் என்னால் நம்பவேமுடியவில்லை. சினிமாவில் அவ்வளவு பெரிய நாயகன், தற்போது அவர் முதல்வராக மாறிவிட்டார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என அதில் அவர் கூறியுள்ளார்.

ஒன்ஸ் மோர் திரைப்படம் குறித்து அர்ஜுன் தாஸ் வெளியிட்ட பதிவு:

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள படம்தான் ஒன்ஸ் மோர். இந்த படம் கிட்டத்தட்ட ஒற்றை ஆண்டுகளாக தயாராகிவந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காதல் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Follow Us