AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிறை கைதியுடன் ஆபாச வீடியோ கால் பேசிய பெண் இன்ஸ்பெக்டர்.. வைரல் வீடியோ மூலம் வெளிவந்த பகீர் சம்பவம்!

Bengaluru Woman Inspector Video Call Issue | பெங்களூரில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், சிறை கைதியுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே ஆடைகளை களைவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறை கைதியுடன் ஆபாச வீடியோ கால் பேசிய பெண் இன்ஸ்பெக்டர்.. வைரல் வீடியோ மூலம் வெளிவந்த பகீர் சம்பவம்!
வீடியோவில் இருந்த இன்ஸ்பெக்டர்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Aug 2026 07:20 AM IST

பெங்களூரு, ஆகஸ்ட் 22 : பெங்களூரில் (Bengaluru) கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், பெண் காவல் அதிகாரி ஒருவர், யாருடனோ வீடியோ காலில் பேசியபடி தனது ஆடைகளை களைவது தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்த நிலையில், அந்த போலீஸ் அதிகாரி யார், அவர் யாருடன் வீடியோ காலில் பேசினார் என்பது தொடர்பான பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில், அது தொடபாக நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்துள்ளன.

தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார்

வீடியோவில் இருக்கும் பெண் போலீஸ் யார் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போதுதான், அவர் கர்நாடகா மாநிலம், தொழில்துறை பாதுகாப்பு படைடை சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டர் என்பது தெரிய வந்துள்ளது. அவர் போலீஸ் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகி ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க : “விஜய் மாமா” எனது அப்பா இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.. கர்நாடகாவில் சுட்டு கொல்லப்பட்டவரின் மகள் உருக்கமான வீடியோ!

ரவுடியுடன் பழக்கத்தில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர்

அந்த பெண் இன்ஸ்பெக்டர் ஹிண்டல்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது நண்பரான ரவுடி சாய்குமார் உடன் வீடியோ காலில் பேசிக்கொண்டு இருந்தபோது ஆடைகளை களைந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர், சாய்குமார் மற்றும் சிலர் மீது கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : 500கிலோ கலப்பட பனீர்.. எல்லாமே கெமிக்கல்ஸ்.. உத்தரப்பிரதேசத்தில் ஷாக் சம்பவம்

இந்த வீடியோ எடுக்கப்பட்டபோது அந்த பெண் இன்ஸ்பெக்டர் ஹிண்டல்கா மத்திய சிறையில் பணியாற்றிக்கொண்டு இருந்துள்ளார். அதே சிறையில் சாய்குமார் அடைக்கப்பட்டு இருந்துள்ளார். அப்போது தான் அவர்களுக்கு இடையே இத்தகைய ஆபாச அழைப்புகள் இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த அழைப்பை பதிவு செய்த சாய் குமார், அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us