ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்ட ராமர் கோயில் பிரசாதம்.. அமேசான் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்..
Ayodhya Ram Temple prasad: சந்து டிரேடிங் கம்பெனியின் ‘பிஹாரி பிரதர்ஸ்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட நெய் லட்டு, கோவா லட்டு, பூந்தி லட்டு மற்றும் பசும்பால் பேடா உள்ளிட்ட இனிப்புகள், ‘ஸ்ரீ ராம் மந்திர் அயோத்தி பிரசாத்’ என்ற பெயரில் அமேசானில் பட்டியலிடப்பட்டிருந்தன. மேலும், “பகவான் ராமரின் ஆசீர்வாதம்” போன்ற வாசகங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.
ஆகஸ்ட் 20, 2026: ‘ஸ்ரீ ராம் மந்திர் அயோத்தி பிரசாத்’ என்ற பெயரில் சாதாரண இனிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதித்ததற்காக, அமேசான் நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தன்னை வெறும் இடைத்தரகர் எனக் கூறி இதற்கான பொறுப்பில் இருந்து அமேசான் தப்ப முடியாது என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்ட ராமர் கோயில் பிரசாதம்:
சந்து டிரேடிங் கம்பெனியின் ‘பிஹாரி பிரதர்ஸ்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட நெய் லட்டு, கோவா லட்டு, பூந்தி லட்டு மற்றும் பசும்பால் பேடா உள்ளிட்ட இனிப்புகள், ‘ஸ்ரீ ராம் மந்திர் அயோத்தி பிரசாத்’ என்ற பெயரில் அமேசானில் பட்டியலிடப்பட்டிருந்தன. மேலும், “பகவான் ராமரின் ஆசீர்வாதம்” போன்ற வாசகங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.
கோயில் நிர்வாகத்திடம் அனுமதி இல்லை:
அயோத்தி ராம ஜென்மபூமி கோயில் பெயரைப் பயன்படுத்தவோ, அவற்றை கோயில் பிரசாதம் எனக் குறிப்பிடவோ ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையிடம் இருந்து உரிய அனுமதி பெறப்படவில்லை என CCPA தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடந்த 2024 ஜனவரியில் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோயிலின் பெயருடன் இத்தகைய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், அவை உண்மையான கோயில் பிரசாதம் என பக்தர்கள் இயல்பாகவே கருதக்கூடும் என்றும், இதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் மத உணர்வுகள் பாதிக்கப்படலாம் என்றும் CCPA தலைமை ஆணையர் நிதி கரே மற்றும் ஆணையர் அனுபம் மிஸ்ரா தெரிவித்தனர்.
மேலும் படிக்க: 500கிலோ கலப்பட பனீர்.. எல்லாமே கெமிக்கல்ஸ்.. உத்தரப்பிரதேசத்தில் ஷாக் சம்பவம்
10 முக்கிய கோயில்களுக்கு விதிகள் விரிவாக்கம்
அயோத்தி ராமர் கோயில் மட்டுமின்றி, 10 முக்கிய மத நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மத நிறுவனத்தின் சான்றளிக்கப்பட்ட அனுமதியின்றி, அதன் பெயருடன் ‘பிரசாதம்’, ‘மகாபிரசாதம்’, ‘போக்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என அமேசானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “விஜய் மாமா” எனது அப்பா இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.. கர்நாடகாவில் சுட்டு கொல்லப்பட்டவரின் மகள் உருக்கமான வீடியோ!
திருப்பதி தேவஸ்தானம், மாதா வைஷ்ணோ தேவி கோயில், ஜெகந்நாதர் கோயில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அமேசான் நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம்:
மேலும், விற்பனையாளர்கள் மற்றும் அமேசானின் குறைதீர் அதிகாரி குறித்த முழுமையான தகவல்கள் தளத்தில் தெளிவாக இடம்பெறுவதை உறுதி செய்யுமாறும் CCPA உத்தரவிட்டுள்ளது. அபராதத் தொகையான ரூ.1 லட்சத்தை 15 நாட்களுக்குள் செலுத்தவும் அமேசானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.