AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழா – விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்

Velankanni Festival Special Trains : வேளாங்கண்ணி ஆரோக்கிய அண்ணை ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29, 2026 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையடுத்து விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழா  – விழுப்புரம்  – நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Aug 2026 21:06 PM IST

நாகப்பட்டினம் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாபட்டபடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பேராலய திருவிழா ஆகஸ்ட் 29, 2026 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி செப்டம்பர் 8, 2026 வரை நடைபெறவிருக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில் திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி, தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. . இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்களால் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : முதல்வர் விஜய் சிரிப்பதை பார்க்க தனி ஸ்கீரின் வேணும்.. பேரவையில் தவெக எம்எல்ஏ வைத்த விசித்திர கோரிக்கை!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின் படி, விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 29, 2026 மற்றும் செப்டம்பர் 8 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்கு புறப்படும் 06133 எண் கொண்ட விழுப்புரம் – நாகப்பட்டினம் சிறப்பு ரயில் அதே நாள் மாலை 1.05 மணிக்கு நாகப்பட்டினம் வந்தடையும்.

அதே போல எதிர் வழிதடத்தில் ஆகஸ்ட் 29, 2026 மற்றும் செப்டம்பர் 8, 2026 ஆகிய தேதிகளில் வண்டி எண் 06134 கொண்ட நாகப்பட்டினம் – விழுப்புரம் சிறப்பு ரயில் நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.20க்கு புறப்பட்டு அதே நாளில் மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் நின்று செல்லும் ரயில் நிலையங்கள்

இந்த சிறப்பு ரயில்கள் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம் சந்திப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீசுவரன் கோயில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்கள் 8 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு.. அடுத்தடுத்து கைதாகும் அதிகாரிகள்.. முன்னாள் சார் பதிவாளருக்கு காப்பு!

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா, வரும் ஆகஸ்ட் 29, 2026 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இந்த திருவிழா, செப்டம்பர் 8, 2026 வரை 11 நாட்கள் மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த திருவிழாவுக்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Follow Us