AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“மின்வாரிய கடன்.. 45 டெண்டர்களில் முறைகேடு!”.. சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி vs நிர்மல் குமார் இடையே கடும் வாக்குவாதம்!!

TNEB debt assembly debate: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் சுமை மற்றும் 45 டெண்டர்களில் நடந்த முறைகேடுகள் குறித்துச் சட்டமன்றத்தில் நிர்மல் குமார் மற்றும் செந்தில் பாலாஜி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. மின்வாரிய நிதியைச் சரியாகப் பயன்படுத்தி மக்கள் பணி சிறப்பான முறையில் செய்யப்படும் என மின்துறை அமைச்சர் பதிலளித்தார்.

“மின்வாரிய கடன்.. 45 டெண்டர்களில் முறைகேடு!”.. சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி vs நிர்மல் குமார் இடையே கடும் வாக்குவாதம்!!
அமைச்சர் நிர்மல் குமார், செந்தில் பாலாஜி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 21 Aug 2026 13:06 PM IST

சென்னை, ஆகஸ்ட் 21: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) கடன் சுமை, பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்துப் பேரவையில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. மின்சார வாரியத்தின் நிதி நிலைமை மற்றும் கடன் மேலாண்மை குறித்துச் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, பேரவையில் பதிலடி விவாதங்கள் அரங்கேறின.

இதையும் படிக்க: “59 திமுக உறுப்பினர்களுக்கும் அரசு வழங்கும் கார் வேண்டாம்!”.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

மின்வாரியத்திற்கு புதிய கடன்கள் வாங்கப்படாதா?

சட்டமன்றத்தில் பேசிய உறுப்பினர் நிர்மல் குமார், மின்சார வாரியத்தின் கடன் சுமை ரூ.2,47,000 கோடியாக அதிகரித்துள்ளது என்றும், ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வட்டி செலுத்தும் நிலை நிலவுவதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், புதிய தவேக அரசில் மின்வாரியத்திற்குப் புதிதாகக் கடன்கள் வாங்கப்படமாட்டாதா, புதிய திட்டங்களுக்கு அரசு நேரடியாக நிதி ஒதுக்குமா அல்லது முதலமைச்சரிடம் நிதி கோரப்பட்டு கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளப்படுமா என வினா எழுப்பினார்.

45 டெண்டர்களில் பெரிய அளவிலான முறைகேடுகள்:

இதற்குப் விரிவாகப் பதிலளித்துப் பேசிய மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது ஒரு பொதுத்துறை கார்ப்பரேஷன் நிறுவனம் என்பதால், கடன் பெற்றுத்தான் உட்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்று விளக்கமளித்தார். மேலும், முந்தைய ஆட்சிக்காலத்தில் இந்தத் துறையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தீவிரமாக ஆராயப்பட்டதில், சுமார் 45 டெண்டர்களில் பெரிய அளவிலான முறைகேடுகள் கண்டறியப்பட்டு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகப் பேரவையில் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: TN Assembly: ஜோசியர் சொன்னால்தான் கோப்புகளை வெளியிடுவீர்களா?” – பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி

அமைச்சர்கள் மாற்றம் முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம்:

மின்சார வாரியத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதையும், கடந்த காலங்களில் போதுமான அளவுக்கு ஆட்கள் நியமிக்கப்படாததையும் சுட்டிக்காட்டி விவாதம் தொடர்ந்த நிலையில், முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டுப் பேசினார். துறைகளில் அமைச்சர்கள் மாற்றம் அடைவது முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம் என்றும், மின்சார விநியோகத்தைக் சீராகப் பராமரிக்கக் கூட்டங்கள் சரியாக நடத்தப்படாததால் தான் ஆங்காங்கே மின்தடை ஏற்படுவதாகவும் விமர்சித்தார். அதற்குப் பதிலடி கொடுத்த மின்துறை அமைச்சர், வாரியத்தின் ஒவ்வொரு ரூபாயும் மக்கள் பயன்பாட்டிற்காகவே சரியாகப் பயன்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.

Follow Us