AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ind vs SL 2nd Test : டாஸ் தோற்ற அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமா? உண்மை என்ன?

Colombo Toss Advantage : இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் டாஸ் தோற்ற அணிகளுக்கே வெற்றி சாதகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ind vs SL 2nd Test : டாஸ் தோற்ற அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமா?  உண்மை என்ன?
இந்திய அணி
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Aug 2026 21:55 PM IST

இலங்கைக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை 165 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, தற்போது 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23, 2026 அன்று கொழும்பில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணி தொடரை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கத்துடன் களமிறங்கும் இந்தப் போட்டி, ஆகஸ்ட் 23, 2026 காலை 10 மணிக்குத் தொடங்கவுள்ளது.

டாஸ் தோற்ற அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமா?

பொதுவகாவே டெஸ்ட் போட்டிகளில், டாஸ் வென்று முடிவெடுப்பது வெற்றிக்கான முதல் படியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தின் டாஸ் அனுபவங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக இந்த மைதானத்தில் டாஸ் தோற்பது இந்தியாவகு்கு சாதகமாக அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு காரணம் இந்த மைதானத்தில் டாஸ் தோற்ற அணிகளுக்கே வெற்றி சாதகமாக அமைந்துள்ளது.

இதையும் படிக்க :  SL vs IND 2வது டெஸ்ட்: இந்தியாவின் பிளேயிங் லெவனில் மிகப்பெரிய மாற்றம்? வெளியான தகவல்

பொதுவாக, டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வெல்லும் அணி ஆட்டத்தின் கட்டுப்பாட்டைத் தன்வசப்படுத்தும். ஆனால், சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தின் புள்ளிவிவரங்கள், டாஸ் யாருக்கு சாதகமாக விழுகிறது என்பதை விட போட்டியில் சிறப்பாக செயல்படுவதே முக்கியம் என்பதை உணர்த்துகின்றன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைதானத்தில் இதுவரை மொத்தம் 46 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவற்றில், டாஸ் வென்ற அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, அதே சமயம் டாஸ் முடிவை இழந்த அணி 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 14 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

டாஸ் தொடர்பான புள்ளிவிவரங்கள்

புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், இந்த மைதானத்தில் டாஸ் முடிவை இழந்த அணிக்கே வரலாற்று ரீதியாகச் சற்று கூடுதல் சாதகமாக இருந்துள்ளது. குறிப்பாக மைதானத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் அல்லது பந்துவீச்சைத் தேர்ந்தெடுப்பது எந்தவொரு அணிக்கும் தனிப்பட்ட அல்லது ஒருதலைப்பட்சமான சாதகத்தை அளிப்பதில்லை. முடிவு தெரிந்த 32 போட்டிகளின் முடிவுகள் சரியாக 50-50 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணி 16 போட்டிகளிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி அதே எண்ணிக்கையிலான போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது: ஆட்டத்தின் முதல் நாள் முதல் ஐந்தாவது நாள் வரை பிட்ச்சின் தன்மை எப்படி இருந்தாலும், அந்த ஐந்து நாட்களும் சிறந்த செயல்திறனுடன் விளையாடும் அணிக்கு மட்டுமே வெற்றி வாய்ப்பு அமைகிறது.

இதையும் படிக்க : இலங்கைக்கு எதிராக 2வது டெஸ்ட் – குல்தீப் யாதவுக்கு பதிலாக 33வயது வீரர்? வெளியான தகவல்

கொழும்பில் உள்ள இந்த மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மொத்தம் 9 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை இரண்டு வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது, மேலும் 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் இலங்கையால் இந்தியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில், தற்போது மிகச் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வரும் இந்திய அணிக்கு, இத்தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றுவதற்கான அருமையான வாய்ப்பு உள்ளது.

Follow Us