இலங்கைக்கு எதிராக 2வது டெஸ்ட் – குல்தீப் யாதவுக்கு பதிலாக 33வயது வீரர்? வெளியான தகவல்
Ind vs SL : இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனையடுத்து 2வது டெஸ்டில் குல்தீப் யாதவிற்கு பதிலாக சாரன்ஷ் ஜெயினை களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மிக முக்கிய மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு பதிலாக சாரன்ஸ் ஜெயினை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிது. காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபா வெற்றி பெற்றது. இதனையடுத்து 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
குல்தீப் யாதவ் மாற்றம்?
முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் மொத்தமாக 25 ஓவர்களை வீசிய அவர் 2 இன்னிங்க்ஸிலும் சேர்த்து 1 விக்கெட்டை மட்டுமை கைப்பற்றினார். இதனால் 2வது டெஸ்ட் போட்டியில் அவரது இடம் கேள்விக்குறியாகியுள்ளது. அவருக்கு பதிலாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் சாரன்ஷ் ஜெயினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : IND vs SL: இலங்கை வீரருடன் ஜெய்ஸ்வால் வார்த்தை போர்! இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததா?




உள்ளூர் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடி வரும் 33 வயதாகும் சாரன்ஷ் ஜெயினுக்கு, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக வாய்ப்பு கிடைத்தது. தற்போது குல்தீப்பிற்கு பதிலாக அவர் களமிறக்க இந்திய அணி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
சாரன்ஷ் ஜெயினின் சாதனைகள்
தற்போது 33 வயதாகும் சாரன்ஷ் ஜெயின், மத்தியப் பிரதேச அணியின் அனுபவம் வாய்ந்த ஆல் ரவுண்டராக உள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்ததன் காரணமாகவே அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான சாரன்ஷ் ஜெயின் இதுவரை 54 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் 188 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 27.30 என்ற சராசரியை வைத்துள்ளார்.
இதையும் படிக்க : IND vs SL: வெற்றியுடன் தொடங்கிய சுப்மன் படை.. இந்திய அணி படைத்த 3 முக்கிய சாதனைகள்!
மேலும், பேட்டிங்கிலும் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். 54 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள சாரன்ஷ் ஜெயின் 2,223 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 2 சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் அடங்கும்.
முதல் டெஸ்டில் அசத்திய மானவ் சுதார்
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார் இந்திய அணியின் வெற்றியில் மிக முக்கிய பங்கு வகித்தார். 2 இன்னிங்ஸிலும் சேர்த்து அவர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், 2வது இன்னிங்க்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதே போல ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக பந்து வீசி 2 இன்னிங்ஸிலும் சேரத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக இலங்கை கேப்டன் தனஞ்சய டி சில்வாவின் முக்கிய விக்கெட்டையும் ஜடேஜா கைப்பற்றினார்.