AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என் மகன்கள் சினிமாவில் துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும் – நடிகர் நாகர்ஜுனா

Nagarjuna Recent Interview | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நாகர்ஜுனா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நாகர்ஜுனா அளித்தப் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது

என் மகன்கள் சினிமாவில் துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும் – நடிகர் நாகர்ஜுனா
மகன்களுடன் நடிகர் நாகர்ஜுனாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Aug 2026 17:27 PM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நாகர்ஜுனா. இவரது நடிப்பில் தெலுங்கு மொழியில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிகர் நாகர்ஜுனாவிற்கு ரசிகர்கள் உள்ளது போல தமிழ் சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் நாகர்ஜுனா தமிழ் சினிமாவில் நடித்தப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் நாகர்ஜுனா இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான கூலி படத்தில் நடித்து இருந்தார். நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜுனா வில்லனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நாகர்ஜுனா தனது 100-வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜுனா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் நாகர்ஜுனா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

என் மகன்கள் சினிமாவில் துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும்:

90-களில், வேறு எந்த முன்னணி நடிகரும் முன்வராத நிலையில், மணிரத்னத்துடன் இணைந்து கீதாஞ்சலி படத்தில் நடித்தது ஒரு துணிச்சலான முடிவாக இருந்தது. அதுவே எனது பயணத்தை வடிவமைத்தது. நாக சைதன்யாவும் அகிலும் அத்தகைய துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 90-களில் அது எளிதாக இருந்தது. ஆனால் இன்று, ஒரு பாதையை அல்லது முயற்சியை ரசிகர்கள் விரும்பவில்லை என்றால், அவர்களின் விமர்சனங்கள் மிகவும் கடுமையாக இருக்கும். 90-களில் தொடர்ந்து ஏழு தோல்விகளைச் சந்தித்தாலும் கூட, அதிலிருந்து எளிதாக மீண்டு வந்துவிட முடிந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. ரசிகர்கள் நம்மை மறந்துவிடுவார்கள், வேறொரு நடிகர் அந்த இடத்தைப் பிடித்துவிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read… தர்மன் படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு நடிகர்? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அமெரிக்காவில் விஸ்வநாத் & சன்ஸ் படம் மொத்தம் வசூலித்தது இவ்வளவா? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Follow Us