சினிமாவில் நல்லவனா நடிச்சு நடிச்சு போர் அடிக்குது – நடிகர் நாகர்ஜுனா
Actor Nagarujuna: தெலுங்கு சினிமாவில் பல நூறு ஹிட் படங்களைக் கொடுத்த நடிகர் நாகர்ஜுனா பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் கூலி படத்தில் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு சினிமாவில் கடந்த 1960களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகர் நாக்ர்ஜுனா (Actor Nagarjuna) கடந்த 1986-ம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து சுமார் 11 ஆண்டுகளாக தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வந்த நடிகர் நாகர்ஜுனா 1997-ம் ஆண்டு வெளியான ரட்சகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை பிரவீன் காந்தி இயக்கி இருந்தார். இவரும் இயக்குநராக அறிமுகம் ஆனப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் இந்தப் படத்தை எழுதி தயாரித்து இருந்தார். மேலும் படத்தில் நடிகை சுஸ்மிதா சென் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். படத்திற்கு ரசிகர்களிடையே விமர்ச்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது போல பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் நாகர்ஜுனா பயணம் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்தார். தீவிரவாதிகளால் பயணிகள் நிறைந்த விமானம் கடத்தப்படும். அவர்களை காவல்துறை அதிகாரியாக இருக்கும் நாகர்ஜுனா எப்படி பத்திரமாக மீட்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான தோழா படத்தில் நடிகர் நாகர்ஜுனா நடித்து இருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




எவ்வளவு நாள்தான் நானும் நல்லவனாவே நடிக்கிறது:
இந்த நிலையில் தற்போது நடிகர் நாகர்ஜுனா தமிழில் தற்போது கூலி படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் நாகர்ஜுனா புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டபோது கூலி படத்தில் தனது கதாப்பாத்திரம் குறித்து பேசியுள்ளார். அதில் ரொம்ப நல்லவனா நடிச்சு நடிச்சு போர் அடிக்குது. அதனாலதான் இந்தப் படத்தில கெட்டவன நடிச்சு இருக்கேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உடன் பணிபுரிய வேண்டும் என்று காத்திருந்தேன். அது இந்தப் படத்தின் மூலம் நிறைவடைந்துவிட்டது என்றும் தெரிவித்து இருந்தார்.
இணையத்தில் வைரலாகும் நடிகர் நாகர்ஜுனாவின் பேச்சு:
“#Coolie: I got bored playing goodie all the time, so done Villain😀. I was dying & waiting to work with Anirudh & Lokesh🤞. Anirudh gave me ‘Iam the Danger’ song. Lokesh used to play random music, especially for baddie & it worked woders🎶🔥”
– #Nagarjunapic.twitter.com/98rDdPCTmx— AmuthaBharathi (@CinemaWithAB) August 12, 2025
Also Read… நடிகர்கள் சூர்யா – ஜோதிகா குழந்தைகளுக்கு பிடித்த நடிகர் இவரா?