Nagarjuna : ‘கூலி படத்தில் நான்தான் ஹீரோ’.. நடிகர் நாகார்ஜுனா பேச்சு!
Nagarjuna About Coolie Movie : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நாகார்ஜுனா. இவர் தமிழ், தெலுங்கு போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். மேலும் ரஜினிகாந்த்தின் கூலி படத்திலும் நெகடிவ் வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், கூலி திரைப்படத்தில் நான்தான் ஹீரோ எனச் சுவாரஸ்யமாகப் பேசியுள்ளார். இது குறித்து தெளிவாகப் பார்க்கலாம்.

நடிகர் நாகார்ஜுனா (Nagarjuna) தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் இவரது படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், வில்லனாக நடிகர் நாகார்ஜுனா நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேடி முதல் உலகமெங்கும் வெளியாகக் காத்திருக்கிறது. இதை முன்னிட்டு இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2025, ஆகஸ்ட் 4 ஆம் தேதி கூலி படத்தின் தெலுங்கு ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றிருந்தது.
இந்நிலையில் அதில் நடிகர் நாகார்ஜுனா கூலி படத்தின் ஹீரோ நான்தான் என பேசியுள்ளது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. அவர் பேசியது பற்றி விவரமாகப் பார்க்கலாம்.




இதையும் படிங்க : தலைவன் எறங்க… சரிதம் எழுத… கூலி படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்
கூலி திரைப்படத்தைப் பற்றிப் பேசிய நாகார்ஜுனா
அந்த நிகழ்ச்சியில் நடிகர் நாகார்ஜுனா, பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் கூலி படத்தைப் பற்றிப் பேசிய அவர், “கூலி திரைப்படத்தில் நான்தான் ஹீரோ எனக் கூறியுள்ளார். மேலும் அவர் அந்த நேர்காணலில், ” இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்திற்காக என்னை அணுகியபோது, வில்லனாக நடிக்கிறீர்களா எனக் கேட்டார். நடிக்க விருப்பமில்லை என்றால், டீ குடித்த விட்டு சினிமா குறித்துப் பேசலாம் என என்னிடம் கூறினார்.
இதையும் படங்க : LCU-விற்காக லியோ படத்தில் ஜார்ஜ் மரியான் கேரக்டர் திணிக்கப்பட்டதா? இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்!
மேலும் இந்த கூலி படத்தில் எனது ரோல் மக்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்படும் என நம்புகிறேன். இந்த படத்தின் ஹீரோ நான்தான். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், எனக்கு நெகடிவ் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும், எனக்கு பாசிடிவ் அனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன்”. என நடிகர் நாகார்ஜுனா அந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார். தற்போது இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
கூலி படக்குழு வெளியிட்ட அறிவிப்பு
#Coolie hot air balloon takes over Malaysia! 🤩#Coolie fever goes sky-high🚀#CooliePromotions #Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv… pic.twitter.com/5tyv6KYBAC
— Sun Pictures (@sunpictures) August 5, 2025
ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், ஸ்ருதி ஹாசன், சௌபின் சாஹிர், சத்யராஜ் மற்றும் உபேந்திரா என பல்வேறு பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக பான் இந்தியப் படமாகவும் இந்த கூலி திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படமானது இந்தியாவைத் தொடர்ந்து சுமார் 36 நாடுகளிலும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படமானது சுமார் 10,000 மேற்பட்ட ஸ்கிரீனில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.