Shruti Haasan : விஜய் சேதுபதியின் டிரெயின் படத்தில் எனது ரோல் இதுதான் – ஸ்ருதி ஹாசன் பேட்டி!
Shruti Haasan About Train Movie : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் ஸ்ருதி ஹாசன். இவரின் நடிப்பில் கூலி திரைப்படமானது வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. மேலும், விஜய் சேதுபதியின் டிரெயின் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் தனது கதாபாத்திரம் குறித்தும், இயக்குநர் மிஷ்கின் குறித்தும் நடிகை ஸ்ருதி ஹாசன் பேசியுள்ளார். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay ) முதல் சூர்யா (Suriya) வரை பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்தது அசத்தியிருக்கிறார். இவர் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் என்பது அனைவரும் அறிந்ததே. இவரின் நடிப்பில் இறுதியாகத் தமிழில் லாபம் என்ற படம் வெளியானது. கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனையடுத்து, தற்போது கூலி (Coolie) படத்தில் நடித்துள்ளார். இந்த கூலி படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதியுடன் (Vijay sethupathi) நடித்திருக்கும் டிரெயின் (Train) படத்தில், அவர் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாகக் கூறியுள்ளார். மேலும் இயக்குநர் மிஷ்கின் குறித்தும் அவர் பேசியுள்ளார். அவரது பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைலாகி வருகிறது.




இதையும் படிங்க : மாளவிகா மோகனனின் பிறந்தநாள்.. ‘சர்தார் 2’ படக்குழு வெளியிட்ட போஸ்டர் வைரல்!
டிரெயின் திரைப்படம் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் பேசியதாவது,
அந்த நேர்காணலில் நடிகை ஸ்ருதி ஹாசனிடம் டிரெயின் திரைப்படத்தைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஸ்ருதி ஹாசன், ” டிரெயின் படத்தில் நான் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறேன். மேலும் மிஸ்கின் சார் உடன் பணிபுரிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அவர் மிகவும் தனித்துவமான நபர். மிஷ்கின் சார், உங்களை உண்மையிலேயே சுதந்திரமாக உணர வைப்பார். அந்த படத்தின் என்னுடைய கதாபாத்திரத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டேன். முதலில் நான் அந்த படத்திற்கு, பாடலை பாடுவதற்காகச் சென்றிருந்தேன்.
இதையும் படிங்க : துல்கர் சல்மானின் 41வது படம்.. பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்!
டிரெயின் படத்திற்கு மிஷ்கின் இசையமைத்திருக்கும் நிலையில், பாடல் பாடுவதற்குதான் சென்றிருந்தேன், அப்போதுதான் மிஷ்கின் சார் என்னை, “பாப்பா இந்த படத்தில் நீ நடி எனக் கூறினார். மீண்டும் விஜய் சேதுபதியுடன் நடித்ததும் ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது” என்று நடிகை ஸ்ருதி ஹாசன் அந்த நேர்காணலில் கூறியிருந்தார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ருதி ஹாசனின் ட்ரெயின் பட பதிவு :
View this post on Instagram
டிரெயின் திரைப்படம் :
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் மற்றும் இசையமைப்பில் உருவாகியிருக்கும் படம் டிரெயின். இந்த படத்தில் முன்னணி வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் சிறப்பு வேடத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. ஒரு டிரெயின் பயணத்தில் நடக்கும் கதையாகத்தான் இப்படமானது உருவாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்த நிலையில், வெளியீட்டிற்குத் தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது