Shruti Haasan : தக் லைஃப் பாடல்.. நான்தான் அந்த வாய்ப்பை கேட்டேன் – ஸ்ருதி ஹாசன்!
Shruti Haasan About Thug Life Movie Song : பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ஸ்ருதி ஹாசன். இவர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றி பேசிய அவர், கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் பாடல் பாடுவதற்கு வாய்ப்பை கேட்டது குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan), இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் இறுதியாகத் தமிழ் சினிமாவில், விஜய் சேதுபதியுடன் (Vijay Sethupathi) லாபம் படத்தில் நடித்திருந்தார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படத்தை அடுத்ததாகத் தமிழில் இவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இதை அடுத்து, இவர் தமிழில் நடித்திருக்கும் திரைப்படம்தான் கூலி (Coolie). இந்தப் படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh kanagaraj) இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கூலி படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி, ஒட்டுமொத்த இந்தியா அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த கூலி திரைப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அவர் அந்த நேர்காணலில், தக் லைஃப் (Thug Life) படத்தின் “விண்வெளி நாயகா” (Vinveli Nayagan) பாடலை பாடுவதற்கு, வாய்ப்பை கெஞ்சிக் கேட்டதாகக் கூறியுள்ளார். அவர் பேசியது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.




இதையும் படிங்க : ஹீரோவுக்காக கதை எழுதுகிறேன்… புதிய படம் குறித்து லப்பர் பந்து பட இயக்குநர் கொடுத்த அப்டேட்!
தக் லைஃப் பட பாடல் பாடியது குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் பேச்சு
அந்த நேர்காணலில் நடிகை ஸ்ருதி ஹாசனிடம், தக் லைஃப் படத்தில் பாடல் பாடியது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த நடிகை ஸ்ருதி ஹாசன், “நான் ரஹ்மான் சார் இசையமைப்பில், காதல் தோல்வி பாடல் பாடுவதற்கு ஸ்டூடியோ சென்றிருந்தேன். அப்போது அவர் ஒரு பாடலை காட்டி, இப்பாடலை டிரை பண்ணி பாக்குறீங்களா எனக் கேட்டிருந்தார். அப்போது நான் அந்த பாடலை படித்துப் பார்த்துவிட்டு, இது தக் லைஃப் படத்தின் எனது அப்பாவின் பாடல் தானே என அவரிடம் கேட்டேன். அப்போது அவர் என்னை அந்த பாடலை பாடி பார்க்க சொன்னார். அன்று பாடியபோது பாடல் சரியாக வரவில்லை. அதன் பிறகு அவர் பின் என்னை அழைப்பார் என நான் நினைத்தேன், ஆனால் அவர் என்னைக் கூப்பிடவே இல்லை.
இதையும் படிங்க : அகரம் அறக்கட்டளையின் 15வது ஆண்டு விழா.. மாஸ் என்ட்ரி கொடுத்த சூர்யா!
நடிகை ஸ்ருதி ஹாசனின் இன்ஸ்டாகிராம் லேட்டஸ்ட் பதிவு :
View this post on Instagram
என்னுடைய கேரியரில் முதல் தடவை, ஒரு பாடலுக்காக நானே மறுபடியும் ட்ரை பண்ணலாம் எனக் கேட்டதில்லை. ஆனால் அந்த பாடலுக்கு நானே ஏ. ஆர். ரஹ்மான் சாரிடம் கேட்டேன். அந்த பாடலுக்காக நான் 15 நாட்கள் பயிற்சி எடுத்தேன், மற்ற பாடல்களையெல்லாம் ஸ்டூடியோ சென்று பாடுவோம், ஆனால் இந்த பாடலை நான் பயிற்சி செய்து பாடினேன். மீண்டும் மாணவியாக உணர்ந்தேன். நான் அந்த பாடல் வாய்ப்பு கேட்பதற்காக வெட்கப் படவில்லை, அவரிடம் தயவு செய்து, பாடல் பாட வாய்ப்பை கெஞ்சி வாங்கினேன். எனது கேரியரில் இதுதான் நான் பாடல் வாய்ப்பு கேட்டது” என நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபனாக பேசியிருந்தார்.