Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கூலி படத்தில் ரஜினிகாந்த் சாரின் பேட்ஜ் நம்பராக 1421 கொடுக்க இதுதான் காரணம் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

Director Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கூலி படத்தில் ரஜினிகாந்த் சாரின் பேட்ஜ் நம்பராக 1421 கொடுக்க இதுதான் காரணம் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Aug 2025 11:45 AM

கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்களின் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj). இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான கைதி, விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்கள் தொடர்ந்து பாஸ் ஆபிஸில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லியோ படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் உடன் கூட்டணி வைத்தார். இந்த கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியான போதே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து படத்திற்கு கூலி என பெயரிப்பட்டது. பின்பு படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது அதில் அவரது பெயர் தேவா என்று குறிப்பிட்டதுடன் அவரது கூலி பேட்ஜ் எண் 1421 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதே போல படத்தில் நடித்து உள்ள மற்ற நடிகர்களின் அறிமுக போஸ்டர்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் ரஜினியின் கூலி பேட்ஜ்க்கு 1421 என்ற எண் கொடுத்ததற்கான காரணம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.

ரஜினிகாந்தின் கூலி பேட்ட்ஜிற்கு 1421 கொடுக்க இதுதான் காரணம்:

நேற்று 2-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பேட்ஸ் எண் 1421 என்று கொடுக்க காரணம் எனது தந்தை ஒரு பஸ் கண்டெக்டர். அவரது கூலி பேட்ஸ் எண் 1421. அவருக்கு டெடிக்கேட் செய்யும் விதமாகவே நான் அந்த எண்ணை ரஜினி சாரின் கூலி பேட்ஜ் எண்ணாக வைத்தேன் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Also Read… பஞ்சதந்திரம் படத்திற்காக ரம்யா கிருஷ்ணன் போட்ட உழைப்பு பார்த்து அசந்துட்டோம் – இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன விசயம்

இணையத்தில் கவனம் பெறும் லோகேஷ் கனகராஜின் பேச்சு:

Also Read… தெறி படத்தின் ஷூட்டிங்கில் நைனிகா நடிப்பைப் பார்த்து விஜய் அசந்துட்டார் – நடிகை மீனா!