Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் நாயகனாக நடிக்கும் படத்தின் பணிகள் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனா முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்துவிட்டார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இந்த நிலையில் இவர் அடுத்ததாக நாயகனாக அறிமுகம் ஆக உள்ள படம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் நாயகனாக நடிக்கும் படத்தின் பணிகள் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
அபிஷன் ஜீவிந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 31 Jul 2025 13:14 PM

கோலிவுட் சினிமாவில் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family). கொரோனா காலத்திற்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக தனது குடும்பத்துடன் இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு வரும் ஒரு குடும்பத்தை பற்றிய கதைதான் இது. இந்தப் படத்தை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Director Abishan Jeevinth) இயக்கி இருந்தார். மேலும் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கியதன் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க சீரியசான கதைக்களம் கொண்ட இந்தப் படத்தை மிகவும் எளிமையாகவும் காமெடி கலந்த எமோஷ்னலாகவும் ரசிகர்களின் மனதை பாதிக்காத வகையில் அழகாக காட்டியிருந்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.

தொடர்ந்து மனிதர்களின் உணர்வுகளை மையமாக வைத்து வெளியாகும் படங்களில் நடித்து வரும் நடிகர் சசிகுமார் இந்தப் படத்திலும் நாயகனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவரது மனைவியாக நடிகை சிம்ரன் ஈழ தமிழ் பேசும் பதுமையாக ரசிகர்களுக்கு காட்சியளத்தார். இப்படி படத்தில் உள்ள அனைத்துக் கதாப்பாத்திரங்களும் ரசிகர்களின் கண்களுக்கு அழகாக காட்சிப்படுத்தி இருந்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இந்தப் படம் திரையரங்குகளில் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹீரோவாக மாறும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்:

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தான் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் நாயகனாக நடிக்க உள்ளார் என்றும் அந்தப் படத்தை டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்த் உடன் இணைந்து பணியாற்றிய அவரது நண்பர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் இந்தப் படத்தில் நடிகை அனௌஷ்வரா ராஜன் நாயகியாக நடிக்க உள்ளதாகவும் முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இவர் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ராங்கி படத்தில் அவரது அண்ணன் மகளாக நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… காமெடி படத்தில் இத்தனை ட்விஸ்டா? அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கும் இந்த மதுர மனோகர மோஹம் படத்தை கண்டிப்பா பாருங்க!

இந்த தகவல் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் தற்போது படத்தின் பணிகள் குறித்து தகவல்கள் வைரலாகி வருகின்றது. அதன்படி அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்க உள்ள படத்தின் பணிகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி 2025-ம் ஆண்டு பூஜையுடன் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அபிஷன் ஜீவிந்த் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜோதிகா மற்றும் கார்த்தி இல்லாமல் சூர்யா இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் அந்த ஒரே ஒரு தமிழ் நடிகர்… யார் தெரியுமா?