எந்த பின்னணியும் இல்லாமல் வரும் பல நடிகர்களுக்கு சிவகார்த்திகேயன் ஒரு எடுத்துக்காட்டாக மாறிவிட்டார் – ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் ஏ.ஆர்.முருகதாஸ் (Director AR Murugadoss). இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகன மறைந்த விஜயகாந்த் நடிப்பில் ரமணா, நடிகர் சூர்யா நடிப்பில் கஜினி, மற்றூம் ஏழாம் அறிவு, நடிகர் விஜய் நடிப்பில் துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் என கோலிவுட் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார். அதன்படி இறுதியாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் வெளியான படம் சிக்கந்தர். இந்தப் படத்தில் நடிகர் சல்மான் கான் நாயகனாக நடித்து இருந்தார்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் பணிகளில் இருக்கும் போதே நடிகர் சிவகார்த்திகேயன் உடனாக கூட்டணியை அறிவித்தார் ஏஆர் முருகாதாஸ். சிக்கந்தர் படத்தின் ஷூட்டிங் இல்லாத போது சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் பணிகளை கவனித்து வந்தார். இந்த நிலையில் சிக்கந்தர் படம் வெளியான பிறகு தற்போது முழு நேரமும் மதராஸி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




சிவகார்த்திகேயன் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன விசயம்:
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில், சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை மான்கராத்தே படத்திற்காக முதலில் பார்க்கும் போது டிவி சேனலில் இருந்து வந்த பையன் அப்படிதான் தெரியும்.
அதுக்கு முன்னாடி அவர் ஒரு 6 இல்லனா 7 படம் தான் நடிச்சு இருப்பார். ஆனா அவர் இப்போ தமிழ் சினிமாவில் எந்தவிதமான பின்னணியும் இல்லாமல் வரும் பல நடிகர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். அது மிகப்பெரிய விசயம். அதற்கு அவரது கடின உழைப்புதான் காரணம் என்றும் தெரிவித்து இருந்தார்.
Also Read… எனக்கு அந்த நடிகையோட நடிக்கனும் பயங்கர ஆசை – சிம்பு சொன்ன நடிகை யார் தெரியுமா?
இணையத்தில் கவனம் பெறும் ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு:
“During MaanKarathey i witnessed #Sivakarthikeyan as an actor who came from Television. He has become an inspiration, for many Actors who come without any background. Now for #Madharaasi I’m happy for this huge growth”
– #ARMurugadosspic.twitter.com/0DCwamMo2B— AmuthaBharathi (@CinemaWithAB) July 30, 2025