Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இன்னொரு அர்ஜூன் ரெட்டியா? விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு

Kingdom : கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கிங்டம். இந்தப் படம் வருகிற ஜூலை 31, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர், புரமோஷன் நிகழ்ச்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் அவருக்கு அர்ஜுன் ரெட்டி அளவுக்கு மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இன்னொரு அர்ஜூன் ரெட்டியா? விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய் தேவரகொண்டா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 Jul 2025 23:09 PM

தென்னிந்திய அளவில் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் (Kingdom) டிரெய்லர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டிரெய்லர் வெளியீட்டிற்கு பிறகு கிங்டம் படம் தான் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது. மேலும் ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற் ப்ரீரிலீஸ் நிகழ்ச்சியின் மூலம் அந்த பரபரப்பை படக்குழுவினர் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர். டிரெய்லரின் ஒவ்வொரு ஃபிரேமும் கிங்டம் பக்கா ஆக்சன் படமாக இருக்கும் என்பதை நிரூபிக்கிறது.  கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா (Vijay Devarakonda) முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் சாம்ராஜ்யம். வித்தியாசமான பின்னணியில் அமைக்கப்பட்ட உணர்ச்சிபூர்வமான ஆக்‌ஷன் த்ரில்லர் இந்தப் படம் ஜூலை 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தின் புரமோஷன்களை பார்க்கும்போது தயாரிப்பாளர்களுக்கு படத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களுக்கு அர்ஜுன் ரெட்டி படத்தை நினைவுபடுத்துகின்றன.  விஜய் தேவரகொண்டாவை தென்னிந்திய அளவில் ஓவர்நைட் ஸ்டார் ஆக்கிய படம் அர்ஜுன் ரெட்டி. அதுவரை இருந்த சினிமா விதிகளை மீறி இந்தப் படம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு,  வந்த கீதா கோவிந்தம் திரைப்படம் குடும்ப ரசிகர்களின் மனதை வென்று ஆல் சென்டர் ஹீரோவாக மாறினார்.

இதையும் படிக்க :  சாதனை படைத்த விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட ட்ரெய்லர்!

சூப்பர் ஸ்டார் படம் மாதிரி  இருக்கும் –  விஜய் தேவரகொண்டா

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா, சூப்பர் ரஜினிகாந்த்தின் பழைய ஆக்சன் படங்கள் அளவுக்கு இந்தப் படம் மாஸாக அமைந்திருக்கிறது. படம் பார்த்த அனிருத் இந்தப் படம் எனது கேரியரில் மைல்ஸ்டோனாக இருக்கும் என்று தெரிவித்ததாக பகிர்ந்துகொண்டார்.

அந்த வகையில் அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட வகையில் எடுக்கப்பட்ட இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒருமுறை ‘கிங்டம்’ படத்திற்காக தனது கம்ஃபோர்ட் ஜோனில் இருந்து வெளியே வந்து இறங்கி அடித்திருக்கிறார்.

இதையும் படிக்க : விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த பிரபல இயக்குநர்!

கதைத் தேர்வு, தோற்றம் மற்றும் வசனங்கள் என ஒவ்வொரு அம்சத்திலும் அவர்கள் வித்தியாசமான விஷயங்களை முயற்சித்தார்கள். இதுவரை வெளியிடப்பட்ட விளம்பரப் பதிவுகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதனால்தான், அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் படங்களைப் போலவே, கிங்டமும் ஒரு பரபரப்பான படமாக இருக்கும் என்று ரவுடி ஹீரோவின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.