Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kingdom: சாதனை படைத்த விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட ட்ரெய்லர்!

Kingdom Movie Trailer Crosses Million Views Record : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியிருப்பது கிங்டம் திரைப்படம். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், 24 மணி நேரத்தில் மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

Kingdom: சாதனை படைத்த விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட ட்ரெய்லர்!
கிங்டம் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 29 Jul 2025 18:07 PM

தெலுங்கு இயக்குநர் கௌதம் தின்னனுரி (Gowtam Tinnanuri) இயக்கத்தில், ரிலீசிற்கு கடத்திருக்கும் திரைப்படம் கிங்டம் (Kingdom). இந்த படத்தில் முன்னணி நாயகனாக நடிகர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) நடித்துள்ளார். இந்த கிங்டம் படமானது பான் இந்திய மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படமானது வரும் 2025, ஜூலை 31ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படமானது விஜய் தேவரகொண்டாவின் 12வது திரைப்படமாக உருவாகியிருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக இப்படத்தில், நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri borse) நடித்துள்ளார். இவர் தமிழில் துல்கர் சல்மானின் காந்தா படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிங்டம் படத்தின் ட்ரெய்லர் கடந்த 2025, ஜூலை 26ம் தேதி  இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருந்தது.

இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியை படக்குழு, திருப்பதியில் மிக பிரமாண்டமாக கொண்டாடியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின்போது வெளியான ட்ரெய்லர் (Kingdom Movie trailer) தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ட்ரெய்லர் வெளியாகி 24 மணிநேரத்தில் சுமார் 6.10 மில்லியன் பார்வைகளையும், 2,76,000 ஆயிரத்திற்கும் மேலான லைக்குக்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த தகவலானது, தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : மோகன்லாலின் லூசிஃபர் 3 படம் பற்றி தவறான கருத்து? – நடிகர் பிருத்விராஜ் தரப்பு விளக்கம்!

கிங்டம் திரைப்படத்தின் ட்ரெய்லர் பதிவு :

கிங்டம் திரைப்படத்தின் கதைக்களம் :

இந்த கிங்டம் திரைப்படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, போலீஸ் ஸ்பையாக நடித்துள்ளார். மேலும் ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க சிறைக்குச் செல்லும் அவர், அந்த குற்றவாளி தனது அண்ணன் என்பதைத் தெரிந்து கொள்கிறார். அவர் அண்ணன் எதற்காகக் குற்றவாளியாக மாறவேண்டும், மற்றும் அவரின் போராட்டம் எதற்காக என்று தெரிந்துகொள்கிறார். அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பது இப்படத்தின் மூல கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சஞ்சய் தத்தின் பிறந்த நாளில் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட தி ராஜா சாப் படக்குழு!

இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்றே கூறலாம். இந்த படமானது தமிழ், தெலுங்கு, இந்தி , மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், படத்தின் ப்ரீ- புக்கிங் ஆரம்பமாகியுள்ளது. இந்த படமானது முதல் நாளிலே சுமார் ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.