இந்த தருணம் எனக்கும் 3 BHK படத்திற்கும் நிறைய அர்த்தம் தருகிறது – இயக்குநர் ஸ்ரீ கணேஷ்!
3 BHK Movie: நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் 3 BHK. ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு செல்ல எவ்வளவு எல்லாம் சிரமப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருந்தது.

தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான எட்டு தோட்டாக்கள் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (Director Sri Ganesh). இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கடண்டஹ் 2022-ம் ஆண்டும் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான குருதி ஆட்டம் படத்தை இயக்கினார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். இந்தப் படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் தான் 3 BHK. மிடில் கிளாஸ் குடும்பத்தின் சொந்த வீடு என்ற கனவை மையமாக வைத்து இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை சைத்ரா ஜே ஆச்சார் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், யோகி பாபு, சுப்பு பஞ்சு, விவேக் பிரசன்னா, தலைவாசல் விஜய் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.




சொந்த வீடுங்குறது சமூகத்தில் கிடைக்கும் மரியாதை:
சொந்த வீட்டின் அருமை மற்றும் அதனால் சமூகத்தில் கிடைக்கும் மரியாதை என்பது சொந்த வீடு வைத்து இருப்பவர்களை விட அந்த வீடு இல்லாதவர்களுக்குதான் அதிகம் புரியும். வாடகைக்கு ஒரு வீட்டில் இருக்கும் போது அந்த வீட்டிற்கு வாட்டகை கொடுத்தாலும் அந்த வீட்டின் உரிமையாளருக்கு பயந்து அவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வாழும் வாழ்க்கையை வாடகை வீட்டில் வாழும் ஒவ்வொருவரும் தினம்தினம் கடந்துபோதும் விசயம்.
அது மட்டும் இன்றி சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருக்கும் போது உறவினர்களால் ஏற்படு அவமானங்களும் கொஞ்சம் நஞ்சம் இருக்காது. இப்படி இதை எல்லாம் கடந்து எப்படியவது சொந்த வீடு வாங்கிவிட வேண்டும் என்று உழைக்கும் மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு அது அவ்வளவு எளிதான காரியமும் இல்லை.
Also Read… நடிகர் தனுஷ் நடிப்பில் பார்க்க பார்க்க சலிக்காத படங்கள் ஒரு லிஸ்ட்!
சொந்த வீடு என்ற அடிப்படை கனவை மையமாக வைத்து இந்த எல்லா பிரச்னைகளையும் வெளிப்படையாக 3 BHK படத்தில் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் மிகவும் அழகாக காட்டியிருப்பார். இந்தப் படம் கடந்த 4-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதாம இயக்குநர் ஸ்ரீ கணேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஸ்ரீ கணேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
This moment means a lot to Me, to our Film #3BHK ☺️❤️
A Big Thank You to Audience, each one of You for taking Time to watch our Film, spread the word ❤️ This Film has given me Hope to Write, Make more Films with Heart & Efforts.
Sincere Thanks to my Team, they are the Reason… pic.twitter.com/Rr96WmzlTG
— Sri Ganesh (@sri_sriganesh89) July 29, 2025
Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது மாமன் படக்குழு… எப்போது தெரியுமா?