Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை… நடிப்பு அசுரன் தனுஷிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

HBD Dhanush: கோலிவுட் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது ஹாலிவுட் வரை பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் இன்று தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை… நடிப்பு அசுரன் தனுஷிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Jul 2025 13:23 PM

கோலிவுட் சினிமாவில் 90களில் பல ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் வெங்கட் பிரபு. இவர் ஜூலை மாதம் 28-ம் தேதி 1983-ம் ஆண்டு பிறந்தார். இவரது அண்ணன் தான் இயக்குநர் செல்வராகவன். கஸ்தூரி ராஜா தனது இரண்டு மகன்களையும் ஒரே நேரத்தில் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார். அதில் முதல் மகன் செல்வராகவனை இயக்குநராகவும் இரண்டாவது மகன் வெங்கட் பிரபுவை நடிகராகவும் களமிறக்கினார். சினிமாவிற்காக வெங்கட் பிரபுவின் பெயர் தனுஷ் (Actor Dhanush) என்று மாற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது சினிமா வட்டாரங்கள் மட்டும் இன்றி நாடு முழுவதும் இவரை தனுஷ் என்றே பலரும் அறிவார்கள். கோலிவுட் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனவர் தற்போது ஹாலிவுட் வரை பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.

பல நெகட்டிவ் விமர்சனங்களை பாசிட்டிவாக மாற்றிய நடிகர் தனுஷ்:

நடிகர் தனுஷ் முன்னதாக பல பேட்டிகளில் அவர் சினிமாவில் அறிமுகம் ஆனபோது நடைப்பெற்ற பாடிஷேமிங் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் முக்கியமாக இவர் அறிமுகம் ஆன துள்ளுவதோ இளமை படத்தின் படப்பிடிப்பின் போது ஷூட்டிங் பார்க்க வந்த நபர் இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என்று கிண்டலடித்ததை கூறியுள்ளார்.

அது மட்டும் இன்றி பல விமர்சனங்களும் கேலிகளும் நடிகர் தனுஷ் அறிமுக காலத்தில் நடித்த படங்களுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த விமர்சங்களை அனைத்தும் மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்ட நடிகர் தனுஷ் ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறியது அவரது ரசிகர்களுக்கு மிகவும் பெருமைமிக்க ஒன்றாகவே உள்ளது.

சினிமாவில் மல்டி டேலண்ட்டராக இருக்கும் தனுஷ்:

சினிமாவில் நடிகராக தனுஷ் அறிமுகம் ஆகி இருந்தாலும் பல துறைகளில் கால் பதித்து பிரபலமாகியுள்ளார். அதன்படி தமிழ் சினிமாவில் இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பல துறைகளில் தனது திறைமையை வெளிப்படுத்தி சாதனைகளைப் படைத்துள்ளார் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைப் போல இவரது இயக்கத்தில் வெளியான படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் எழுதிப் பாடியுள்ளார். இந்தப் பாடல் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று 27-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே தற்போது வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று 28-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் தனுஷ் தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read… நடிப்பிற்காக எவ்வளவு கடுமையாக உழைக்கவும் நான் தயார் – டிஎன்ஏ பட நடிகை நிமிஷா சஜயன்

இட்லி கடை படத்தின் பாடல் குறித்து வெளியான எக்ஸ் தள பதிவு:

Also Read… கூலி படத்தில் வைலன்ஸ்ட் காட்சிகளில் எந்த சமரசமும் செய்யவில்லை – லோகேஷ் கனகராஜ்