Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajinikanth : சுயசரிதை எழுதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!

Rajinikanths Autobiography : கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் இதுவரை சுமார் 170 படங்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இவர் தற்போது தன்னுடைய வாழ்க்கையைச் சுயசரிதையாக எழுதி வருகிறார். இது குறித்து நடிகர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

Rajinikanth : சுயசரிதை எழுதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!
ரஜினிகாந்த்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 27 Jul 2025 20:34 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) படங்களுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் வேட்டையன் (Vettaiyan). இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான இப்படமானது கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவர் இணைந்து நடித்திருந்த படம் கூலி (Coolie). இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படமானது, ஆரம்பத்தில் தலைவர் 171வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய சுயசரிதையை (Autobiography) எழுதிவருகிறார் என கூறியுள்ளார். அவரின் வாழ்க்கை விஷயங்களை கதையாக எழுதிவருவதாகவும், நிச்சயம் அந்த கதை படமாகவும் எனக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த லோகேஷ் காக்ராஜும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இதனால்தான் எனது குடும்ப வாழ்க்கையை ரகசியமாக வைத்திருக்கிறேன் – லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

ரஜினிகாந்தின் சுயசரிதை படம் பற்றி லோகேஷ் கனகராஜ் பேச்சு :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “நடிகர் ரஜினிகாந்த் சுயசரிதை எழுதி வருகிறார். கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் சும்மா இருக்கும்போது, அவர் எப்பொழுதும் எழுந்துகொண்டுதான் இருப்பார். ஒருவேளை அவரின் சுயசரிதை படமானால் , அவரின் இளம் வயது கதாபாத்திரத்திற்கு நடிகர் தனுஷ் பொருத்தமாக்க இருப்பர்.

இதையும் படிங்க : 6 ஆண்டுகளை கடந்த டியர் காம்ரேட் படம்… பிடிஎஸ் புகைப்படங்களை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா!

மேலும் அவரின் 90ஸ் படங்களில் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி அல்லது சிவகார்த்திகேயன் சரியாக இருப்பார்” எனக் கூறியுள்ளார். மேலும் ரஜினிகாந்த்தின் சுயசரிதை படமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

கூலி பட ட்ரென்டிங் பாடல் பதிவு :

ரஜினிகாந்த்தின் கூலி :

நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியிருப்பது கூலி. இந்த படத்தில் முன்னணி வேடத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டேவும் சிறப்புப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகிறது. இது முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2025, ஆகஸ்ட் 2ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.