Coolie : அரங்கம் அதிரட்டுமே.. கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு இதோ!
Coolie Big Event Update : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது படக்குழு வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் இறுதியில் வெளியான திரைப்படம் வேட்டையன் (Vettaiyan). இந்த திரைப்படத்தை அடுத்ததாக, ஆரம்பத்தில் தலைவர்171 என அறிவிக்கப்பட்ட திரைப்படம் கூலி (Coolie). இந்த திரைப்படத்தைக் கோலிவுட் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இதுவரை தளபதி விஜய் (Thalapath Vijay) முதல் கமல்ஹாசன் வரை தமிழ் பிரபல நடிகர்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். லோகேஷின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் முன்னணி நாகனாக நடித்திருக்கும் படம் கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன் பான் இந்திய நடிகர்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இப்படமும் ரிலீசிற்கு தயாராகியுள்ளது.
இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா (Coolie Audio Launch) எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.




கூலி படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியைப் படக்குழு ஒன்றாக நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. கூலி படத்தின் ட்ரெய்லர் மற்றும் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி, வரும் 2025, ஆகஸ்ட் 2ம் தேதியில் சென்னை நேரு உள் அரங்கத்தில் வைத்து நடைபெறவுள்ளதாகப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாள்… லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் இதோ!
கூலி படக்குழு வெளியிட்ட இசை வெளியீட்டு விழா குறித்த பதிவு :
Stay Tuned! #Coolie pic.twitter.com/SK1orO6g6p
— Sun Pictures (@sunpictures) July 25, 2025
நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தின் 3வது இப்பாடலின் வெளியீட்டு விழா , சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத் மற்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் கலந்துகொண்டிருந்தனர். கூலி படத்தில் பவர் ஹவுஸ் பாடல் அந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. மேலும் சமீப காலமாகக் கூலி படத்திற்கு இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி போன்றவை நடக்காது எனத் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில், படக்குழு இரு நிகழ்ச்சியையும் ஒன்றாக நடத்த முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கூலி படத்தில் வைலன்ஸ்ட் காட்சிகளில் எந்த சமரசமும் செய்யவில்லை – லோகேஷ் கனகராஜ்
கூலி திரைப்பட நடிகர்கள் :
இந்த கூலி படத்தில் ரஜினிகாந்த்துடன் பான் இந்திய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தியில் நடிகர் அமீர்கானும், தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனாவும், கன்னடத்தில் உபேந்திராவும் மற்றும் மலையாளத்தில் சௌபின் சாஹிரும் கூலி திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இதில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் சத்யராஜின் மகளாக. நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். அனைவரும் ரஜினிகாந்த்தின் மகளாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், குழப்பத்திற்கு நடிகை ஸ்ருதி ஹாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.