கூலி படத்தில் வைலன்ஸ்ட் காட்சிகளில் எந்த சமரசமும் செய்யவில்லை – லோகேஷ் கனகராஜ்
Director Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகள் அதிகம் நிறைந்த படங்களை இயக்கும் இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj). இதற்காக சில எதிர்மறையான விமர்சனங்களும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இவரது இயக்கத்தில் வெளியாக உள்ள கூலி படத்தில் வன்முறை காட்சிகள் எப்படி இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியபோது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எனக்கு ரஜினிகாந்த் சாரை ஹீரோவா பார்ப்பதைவிட அவரோட வில்லனிசம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியிருந்தார். மேலும் இந்த கூலி படத்தின் நீங்க எல்லாம் ரஜினி சாரோட சிறப்பான வில்லனிசத்தப் பாப்பீங்க என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார். இதனால் படத்தில் நிச்சயமாக வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும் என்பது உறுதியானது.
கூலியில் சிறப்பான தரமான சம்பவம் லோடிங்:
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அதில் லோகேஷ் கனகராஜிடம் ரஜினிகாந்தின் ஃபேமிலி ஆடியன்ஸ்காக இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.




அதற்கு பதிலளித்துப் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வன்முறைக்கு எந்த சமரசமும் இருக்காது. இது ஒரு வன்முறை படமாக இருக்கும். குடும்பங்களுக்கான வன்முறையை நியாயப்படுத்த நான் அதிக உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கிறேன். நான் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதில்லை. ஆனால் அது ஒரு அட்ரினலின் ரஷ் கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Also read… பாமக தலைவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கும் சேரன் – ராமதாஸாக நடிக்கும் நடிகர் ஆரி!
இணையத்தில் கவனம் பெரும் எக்ஸ் தள பதிவு:
Q: Have you compromised anything in violence for #Rajinikanth‘s Family audience in #Coolie ❓#LokeshKanagaraj: There’ll be no compromise of violence😤. It’s going to be violent film🩸. I have triggered High emotions to justify the violence for Families🤞. I’ve not used guns &… pic.twitter.com/SyQN1kupkI
— AmuthaBharathi (@CinemaWithAB) July 24, 2025
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கூலி படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள நிலையில் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025- ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… Karuppu: சூர்யாவின் ‘கருப்பு’ படம்… ரிலீஸ் பற்றி அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!