நெட்ஃபிளிக்ஸில் மிஸ்பன்னாமல் பார்க்க வேண்டிய க்ரைம் திரில்லர் படம் டிடெக்டிவ் உஜ்வலன்!
Detective Ujjwalan Movie Review: மலையாள சினிமாவில் தொடர்ந்து காமெடி மன்றும் செண்டிமெண்ட் படங்களில் நடித்து வந்தவர் நடிகர் தயன் ஸ்ரீநிவாசன். இவர் தற்போது க்ரைம் த்ரில்லர் படத்தில் நடித்து இருந்தார். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற டிடெக்டிவ் உஜ்வலன் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

இந்திரனீல் கோபிகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஜி எழுதி இயக்கியுள்ள படம் டிடெக்டிவ் உஜ்வலன். இந்தப் படத்தில் நடிகர் தயன் ஸ்ரீநிவாசன் (Dhyan Sreenivasan) நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் சிஜு வில்சன், ரோனி டேவிட் ராஜ், கோட்டயம் நசீர், சீமா ஜி. நாயர், கிளாரி சி. ஜான், அமீன், நிஹால் நிஜாம், நிப்ராஸ் நௌஷாத், ஷாஹுபாஸ், மேத்யூ புதுக்கடன், ஜேக்கப், ஜெகதீஷ், கலாபவன் நவாஸ், நிர்மல் பாலாழி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மிஸ்ட்ரி க்ரைம் திரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் கடந்த மே மாதம் 23-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து டிடெக்டிவ் உஜ்வலன் படம் கடந்த 11-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை தற்போது ஓடிடியில் பார்த்த ரசிகர்கள் படத்தைப் பாராட்டி தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




டிடெக்டிவ் உஜ்வலன் படத்தின் கதை என்ன?
கேரளாவில் உள்ள பிளாச்சிக்காவு என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் உஜ்வலன் (தயன் ஸ்ரீநிவாசன்). எந்தவித தவறும் நடைபெறாத கிராமமாக அந்த பிளாச்சிக்காவு கிராமம் உள்ளது. மேலும் அந்த ஊரில் நடைபெறும் சின்ன சின்ன பிரச்னைகளை சரி செய்ய காவல் துறைக்கு உஜ்வலன் உதவியாக இருக்கிறார். இதன் காரணமாக டிடெக்டிவ் உஜ்வலன் என்று அவரை அந்த கிராமத்தில் உள்ளவர்கள் அழைத்து வருகின்றனர்.
எந்தவித பிரச்னையும் இல்லாத கிராமமாக இருக்கும் அந்த பிளாச்சிக்காவு கிராமத்தில் திடீரென ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலை எப்படி நடந்தது என்று கண்டுபிடிப்பதற்கு முன்பே அடுத்தடுத்து தொடர்ந்து அதே பேட்டனில் கொலை நடைபெறுகிறது.
Also Read… லியோ படத்தில் அதை பன்னலாமா வேண்டாமா என்ற குழப்பம் எனக்கு இருந்தது – லோகேஷ் கனகராஜ்
இதனால் அந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் பயத்திலேயே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கை விசாரிக்க உஜ்வலன் காவல்துறைக்கு உதவி செய்து வருகின்றார். இந்த நிலையில் தொடர்ந்து கொலை நடைப்பெற்று வருகின்ற நிலையில் விசாரணைக்காக போலீஸ் குழு அந்த கிராமத்திற்கு வருகிறது.
இந்த சூழலில் அந்த விசாரணையில் உஜ்வலன் தலையிடுவதை அந்த போலீஸ் குழு தடுக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த போலீஸ் குழு அந்த குற்றத்தை செய்தவரை கண்டுபிடித்ததா அல்லது உஜ்வலன் அந்த கொலையாளியை கண்டுபிடித்தாரா என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
டிடெக்டிவ் உஜ்வலன் படம் குறித்த எக்ஸ் தள பதிவு:
Introducing CID Vijayan’s ilaya puthran Detective Ujjwalan 🕵️ pic.twitter.com/IqJUP9PejC
— Netflix India South (@Netflix_INSouth) July 13, 2025
Also Read… கூலி படத்தில் ரஜினி சாரை வில்லனாக நடிக்க வைப்பதே முதல் ப்ளான் – லோகேஷ் கனகராஜ் சொன்ன விசயம்