லியோ படத்தில் அதை பன்னலாமா வேண்டாமா என்ற குழப்பம் எனக்கு இருந்தது – லோகேஷ் கனகராஜ்
Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் பிசியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லியோ படத்தில் பணியாற்றும் போது ஏற்பட்ட குழப்பம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj). இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ளார். அதில் கூலி படம் குறித்து நிறைய விசயங்களை பகிர்ந்துகொண்ட அவர் முன்னதாக அவரது இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் குறித்தும் சில விசயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தில் நடித்த நடிகர் சஞ்சய் தத் பேசிய சர்ச்சைக்குறிய கருத்து இணையத்தில் பரபரப்பை கிளப்பியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசிய போது, லியோ படத்தில் விஜய்க்கு ஃப்ளாஸ்பேக் காட்சிகள் இருக்கும். அந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பு வரை அந்த ஃப்ளாஸ்பேக் காட்சிகளை எடுக்கலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்துவந்தாக வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் ரசிகர்கலிடையே கவனம் பெற்று வருகின்றது.




Also Read… அரசியலில் களமிறங்குவது குறித்து விஜய் சொன்ன விசயம்… நடிகர் ஷாம் ஓபன் டாக்!
இணையத்தில் கவனம் பெறும் லோகேஷ் கனகராஜின் வீடியோ:
“I had confusion to keep whether #LEO flashback or not. For marketing we have to place dance for Vijay sir, that’s why I kept it. I felt if I’ve extended the flashback to 30 mins, it would’ve been better, but theatres won’t accept that runtime”
– #Lokeshpic.twitter.com/Y3coF2KwAn— AmuthaBharathi (@CinemaWithAB) July 24, 2025
விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த லியோ படம்:
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்து இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடியை திரையில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மடோனா செபாஸ்டியன், ஜார்ஜ் மரியன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தது குறிப்பிடத்தகது.
Also Read… இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட்ஸ் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்!