Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Maareesan Review: வடிவேலு – ஃபஹத் ஃபாசில் காம்போ.. எப்படி இருக்கு மாரீசன் படம்? – விமர்சனம் இதோ!

Maareesan Movie Review in Tamil: வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளிவந்துள்ள "மாரீசன்" படம் ஒரு திருடனுக்கும், மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையே நடக்கும் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாக அமைந்துள்ளது. கதையின் சுவாரஸ்யம் மற்றும் நகைச்சுவை கலந்த காட்சிகள் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

Maareesan Review: வடிவேலு – ஃபஹத் ஃபாசில் காம்போ.. எப்படி இருக்கு மாரீசன் படம்? – விமர்சனம் இதோ!
Mareesan Review
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 25 Jul 2025 10:50 AM

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வைகைப்புயல் என அன்போடு அழைக்கப்படுபவர் வடிவேலு (Actor Vadivelu). இவர் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இந்த முறை காமெடியனாக இல்லாமல் கதையின் மைய கேரக்டராக நடிக்க தொடங்கியிருக்கிறார். அப்படியாக 2023ம் ஆண்டு மாமன்னன் படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து 2025, ஜூலை 25ம் தேதியில் “மாரீசன்” படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளார். இருவரும் ஏற்கனவே மாமன்னன் படத்தில் நேரெதிர் கேரக்டரில் நடித்திருந்தனர். இப்படியான நிலையில் மாரீசன் (Maareesan Movie) படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியான போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா என்பதை விமர்சன ரீதியாக பார்க்கலாம்.

மாரீசன் படம்

அறிமுக இயக்குநர் சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த மாரீசன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா என பலரும் நடித்திருக்கின்றனர்.

Also Read: Vadivelu : நகைச்சுவை என்பது கல்வெட்டு கிடையாது… அவரால் தான் நான் நடிக்கவில்லை.. வடிவேலு பேச்சு!

படத்தின் கதை

மாரீசன் படத்தின் கதைப்படி, ஃபஹத் ஃபாசில் ஒரு கைதேர்ந்த திருடன். திருட்டு வழக்கில் சிறை சென்று விட்டு விடுதலையாகி ஒரு வீட்டுக்கு திருட செல்கிறார். அந்த வீட்டில் வடிவேலு கட்டிப்போடப்பட்டுள்ளார். தனக்கு மறதி நோய் இருப்பதாகவும், காப்பாற்றினால் பணம் தருவதாகவும் சொல்கிறார். வடிவேலுவிடம் அதிக அளவில் வங்கி கணக்கில் பணம் இருப்பதை அறிந்த ஃபஹத் ஃபாசில் அதனை திருட நினைக்கிறார். இதற்காக நாகர்கோயிலில் இருந்து திருவண்ணாமலை வரை அவரை பைக்கில் அழைத்து செல்கிறார்.

இப்படியான நிலையில் வடிவேலு செல்லும் வழியில் ஃபஹத் ஃபாசில் அடையாளங்களை கொண்டு தொடர்ச்சியாக கொலைகள் செய்கிறார். இதன் பின்னணி என்ன? வடிவேலு அவ்வாறு செய்ய காரணம் என்ன? ஃபஹத் ஃபாசில்  – வடிவேலு தொடர்பு என்ன? என எல்லாவற்றுக்கும் இப்படம் விடை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

படம் எப்படி?

இயக்குநர் சுதீஷ் ஷங்கர் இதற்கு முன் மலையாளத்தில் நிறைய சீரியல்களை இயக்கியுள்ளார். அந்த அனுபவம் இந்த படத்தில் கைகொடுத்துள்ளது. படம் முழுக்க பயணத்தை மையப்படுத்தியுள்ள நிலையில் முடிந்தவரை எந்த இடத்திலும் சலிப்பு தட்டிவிடக்கூடாது என்பதில் மெனக்கெட்டுள்ளார். ஆனால் எப்போது கதை நேர்கோட்டில் சென்று கொண்டிருந்தால் சற்று அயர்ச்சி ஏற்படும் என்பதே உண்மை. படம் முழுக்க ஃபஹத் ஃபாசில் மற்றும் வடிவேலு இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்.

Also Read:  ஃபகத் பாசில் வைத்திருக்கும் 17 வருட பழைய போன்.. அதன் விலை இத்தனை லட்சமா?

இருவருக்குள்ளும் உள்ள புரிதல் சரியான அளவில் திரையில் வெளிப்பட்டுள்ளது. கிளைமேக்ஸ் வரை கதையை சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருப்பது படத்தின் பலமாக அமைந்துள்ளது. இந்த இரண்டு கேரக்டர்களை தவிர நிறைய நட்சத்திரங்கள் படத்தில் இருந்தால் அவர்களுக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லாதது ஏமாற்றம் தான். கதையின் போக்கில் காமெடி, சின்ன சின்ன ட்விஸ்ட் என ரசிக்க வைக்கிறது. முதல் பாதி, இரண்டாம் பாதி வேறுபடுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

யுவனின் பின்னணி இசை மற்றும் கலையரசனின் ஒளிப்பதிவு இரண்டு மனதை கொள்ளை கொள்கின்றன. குறைகள் இருந்தாலும் ஃபஹத் ஃபாசில் -வடிவேலு காம்போ நிச்சயம் நம் மனதை நிறைய செய்கிறது. மாரீசன் படம் கண்டிப்பாக இந்த வீக்கெண்ட் குடும்பத்துடன் தியேட்டரில் காணலாம்.