Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

6 ஆண்டுகளை கடந்த டியர் காம்ரேட் படம்… பிடிஎஸ் புகைப்படங்களை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா!

Actress Rashmika Mandanna: நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் படம் 6 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து ராஷ்மிகா மந்தனா பிடிஎஸ் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

6 ஆண்டுகளை கடந்த டியர் காம்ரேட் படம்… பிடிஎஸ் புகைப்படங்களை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா!
ராஷ்மிகா மந்தனாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Jul 2025 15:51 PM

நடிகர் விஜய் தேவரகொண்டா (Actor Vijay Devarakonda) நாயகனாகவும் நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna) நாயகியாகவும் நடித்த படம் டியர் காம்ரேட். ரொமாண்டிக் ட்ராமாவாக வெளியான இந்தப் படத்தை இயக்குநர் பரத் கம்மா இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த 26-ம் தேதி ஜூலை மாதம் 2019-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பைப் அளித்தனர். மேலும் படம் தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் பிக் பென் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருடன் இணைந்து நடிகர்கள் ஸ்ருதி ராமச்சந்திரன், ராஜ் அர்ஜுன், சுஹாஸ், காளி வெங்கட், விகாஸ், திவ்யா ஸ்ரீபாதா, எதிர் கும்பலாக வினய் மகாதேவ், சாருஹாசன், ஆனந்த், கல்யாணி நடராஜன், விவா ஹர்ஷா, பிரத்யுஷா ஜொன்னலகத்தா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

6 ஆண்டுகளை கடந்த டியர் காம்ரேட் படம்:

டியர் காம்ரேட் என்று இந்தப் படத்திற்கு பெயர் வைக்கப்பட்டு இருந்தாலும் படத்தில் அரசியல் பேசப்பட்டதா என்றால் இல்லை. இது முழுக்க முழுக்க ரொமாண்டிக் ட்ராமாவாக இந்தப் படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டியர் காம்ரேட் படம் திரையரங்குகளில் வெளியாகி நேற்று 26-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டுடன் 6 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தை கொண்டாடும் விதமாக படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… அமேசானில் காணக் கிடைக்கும் குபேரா படம்… தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறாத காரணம் என்ன?

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… மதராஸி படம் கஜினி மற்றும் துப்பாக்கி மாதிரி இருக்க வேண்டும் என நினைத்தேன் – ஏ.ஆர்.முருகதாஸ்