Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Fahadh Faasil : ரசிகர்களுக்கு என் நடிப்பு சலித்து விட்டால்.. என் பிளான் இதுதான் – ஃபகத் பாசில்!

Fahadh Faasil About Backup Career : மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஃபகத் பாசில். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் மாரீசன். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ஃபகத் பாசில், தனது நடிப்பு ரசிகர்களுக்குச் சலித்துவிட்டால் உபர் ட்ரைவராகிவிடுவேன் எனக் கூறியுள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Fahadh Faasil : ரசிகர்களுக்கு என் நடிப்பு சலித்து விட்டால்.. என் பிளான் இதுதான் – ஃபகத் பாசில்!
ஃபகத் பாசில்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 26 Jul 2025 22:47 PM

தென்னிந்தியத் திரைப்படங்களில் முன்னணி நடிகராக மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் ஃபகத் பாசில் (Fahadh Faasil). இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் முக்கிய வேடங்களில் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். மேலும் இவர் புஷ்பா (Pushpa) திரைப்படத்தின் மூலம் பான் இந்திய அளவிற்கு மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் தமிழில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாரீசன் (Maareesan). இயக்குநர் சுதீஷ் சங்கர் (Sudheesh Sankar) இயக்கத்தில் வெளியான இப்படத்தில், நடிகர் வடிவேலுவுடன் (Vadivelu) இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது திரையரங்குகளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ஃபகத் பாசில், தனது நடிப்பு ரசிகர்களுக்குச் சலித்துவிட்டால், உபர் கார் (Uber driver) ட்ரைவராகிவிடுவேன் எனப் பேசியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் ஃபகத் பாசில் பேசியது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : லியோ படத்தில் பிடித்த சீன்.. லோகேஷ் கனகராஜ் பகிரும் நினைவுகள்!

நடிகர் ஃபகத் பாசில் தனக்குப் பிடித்த வேலையைப் பற்றிச் சொன்ன விஷயம் :

மாரீசன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நடிகர் ஃபகத் பாசில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நேர்காணலில் அவர் நடிப்பை கடந்து, தனக்குப் பிடித்த விஷயம் குறித்துப் பேசியிருந்தார். அதில் அவர், ” ரசிகர்களுக்கு எனது நடிப்பு சலித்துவிட்டால், பார்சிலோனாவில் உபர் கார் ட்ரைவராகிவிடுவேன். மக்களை ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு அழைத்துக் கொண்டு சேர்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். மேலும் ஒருவர் சென்றடையும் இலக்கை தெரிந்துகொள்வது மிகவும் அழகான விஷயம்” என நடிகர் ஃபகத் பாசில் அந்த நேர்காணலில் கூறியிருந்தார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : பெரும் வரவேற்பு.. ‘தலைவன் தலைவி’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

மாரீசன் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர் :

ஃபகத் பாசில் மற்றும் வடிவேலுவின் மாரீசன் முதல் நாள் வசூல் :

நடிகர் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலுவின் கூட்டணியில், இரண்டாவது முறையாக வெளியான படம் மாரீசன். இந்த படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியிருந்தார். இந்த படமானது பயணம், எமோஷனல் மற்றும் நகைச்சுவை என பல்வேறு கதைக்களத்துடன் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஃபகத் பாசில் திருடன் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படமானது கடந்த 2025, ஜூலை 25ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. இப்படமானது வெளியாகி முதல் நாள் நிறைவடைந்த நிலையில், மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா ? இப்படமானது முதல் நாளில் சுமார் ரூ. 2.2 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் தினத்தந்தி செய்தி தளத்தில் பகிரப்பட்டுள்ளது.