Vijay Antony: சாய் அபயங்கர் திறமையோடு வந்திருக்கிறார்… விஜய் ஆண்டனி பேச்சு!
Vijay Antony About Sai Abhyankkar : தமிழ் சினிமாவில் பிரபலம் நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் விஜய் ஆண்டனி. சமீபத்தில் நிகழ்ச் ஒன்றில் பேசிய இவர், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பட வாய்ப்புகள் குறித்துப் பேசியுள்ளார். அவருக்குக் கிடைத்த பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் பற்றியும் நடிகர் விஜய் ஆண்டனி பேசியுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனியின் (Vijay Antony) நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் மார்கன் (Maargan). கடந்த 2025, ஜூன் மாதத்தின் இறுதியில் வெளியான இப்படமானது மக்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்த படத்தை இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கியிருந்தார். இந்த படத்தை அடுத்ததாக நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் தமிழில் பல படங்கள் உருவாகிவருகிறது. இந்நிலையில் கடந்த 2025, ஜூலை 24ம் தேதியில் விஜய் ஆண்டனி தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார். விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்திருக்கும் 25வது திரைப்படமான, சக்தி திருமகன் (Shakthi Thirumagan) படத்தின் 2 பாடல்களும் ஒன்றாக வெளியானது. மேலும் இதைப் படக்குழு ஒரு விழாவாகக் கொண்டாடியிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனி கேக்கிற்கு பதிலாக, பிரியாணியை வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்
அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் ஆன்டனி, அதில் அவர் தமிழ் சினிமாவில் புதியவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறியிருந்தார். மேலும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலாகச் சாய் அபயங்கர் (Sai Abyankkar) குறித்து விஜய் ஆண்டனி பேசிய விஷயம் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.




இதையும் படிங்க : பெரும் வரவேற்பு.. ‘தலைவன் தலைவி’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
சாய் அபயங்கர் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி பேசிய விஷயம் :
அந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனியிடம், சாய் அபயங்கர் பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படங்களுக்குத் தொடர்ந்து இசையமைக்கும் வாய்ப்புகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு நடிகர் விஜய் ஆண்டனி, “சாய் அபயங்கர் திறமையோடு வந்திருக்கிறார், அதனால் எல்லோரும் அவருக்கு இசையமைப்பதற்கு வாய்ப்புகளைக் கொடுக்கின்றனர். மேலும் சாம் சி.எஸ். மற்றும் சாய் அபயங்கர் இருவருமே திறமையானவர்கள்தான்” என விஜய் ஆண்டனி அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இந்த தகவலானது மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : சூர்யாவின் மேல் இருக்கும் அன்பு.. விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்!
சாய் அபயங்கர் கைவசம் இருக்கும் படங்கள் :
சாய் அபயங்கர் இசையமைப்பில் இதுவரை ஆல்பம் பாடல்கள் மட்டும் வெளியாகியிருக்கிறது. இவரின் இசையமைப்பில் இன்னும் தமிழில் ஒரு படமும் வெளியாகாத நிலையில், இவருக்குத் தமிழ் மற்றும் மலையாளம் எனப் பல படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். சூர்யாவின் கருப்பு படத்தின் டீஸருக்கும் இவர்தான் இசையமைத்திருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் வரவேற்பைப் பெற்றிருந்தது.
கருப்பு பட டீசர் பதிவு :
On this special day of celebrating @Suriya_offl sir, we’re thrilled to present the powerful teaser of #Karuppu💥#KaruppuTeaser https://t.co/mt3OVur82s #HappyBirthdaySuriya #கருப்பு #కరుప్పు #കറുപ്പ് #ಕರುಪ್ಪು pic.twitter.com/jIgDqSQLWp
— DreamWarriorPictures (@DreamWarriorpic) July 23, 2025
அது தொடர்ந்து சிலம்பரசன், பிரதீப் ரங்கநாதன், கார்த்தி மற்றும் அல்லு அர்ஜுன் படம் என கைவசம் கிட்டத்தட்ட 8 படங்களை வைத்திருக்கிறார். இந்நிலையில், இவருக்கு சினிமாவில் தொடரும் வாய்ப்புகள் குறித்து இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.