Lokesh Kanagaraj: லியோ படத்தில் பிடித்த சீன்.. லோகேஷ் கனகராஜ் பகிரும் நினைவுகள்!
Lokesh Kanakarajs Favorite Leo Movie Scene :இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் ரிலீசிற்கு கடத்திருக்கும் படம் கூலி. ரஜினிகாந்த் இப்படத்தில் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். இடத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்த வரும் நிலையில், சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். அதில் அவர் லியோ படத்தில், தனக்குப் பிடித்த காட்சி குறித்தும், அதை ஒரே டேக்கில் எடுத்தது குறித்தும் பேசியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanakaraj). இவரின் இயக்கத்தில் ரிலீசிற்கு தயாராகிவரும் திரைப்படம் கூலி (Coolie). நடிகர்கள் ரஜினிகாந்த் (Rajinikanth) இப்படத்தில் உச்ச நடிகராக நடித்துள்ளார். மேலும் இவருடன் இப்படத்தில் பான் இந்திய நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படமானது கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் (Aamir Khan)நடித்துள்ளார். இந்த படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த இடமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில், இவர் இயக்கிய லியோ (Leo) படம் பற்றிக் கூறியுள்ளார். அந்த படத்தில் அவருக்குப் பிடித்த காட்சி குறித்துப் பேசியுள்ளார். அந்த நேர்காணலில் அவர் லியோ படத்தை பற்றிப் பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : சாய் அபயங்கர் திறமையோடு வந்திருக்கிறார்… விஜய் ஆண்டனி பேச்சு!
லியோ படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசிய விஷயம் :
கூலி திரைப்படத்தின் தொடர்பாக லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர் லியோ படத்தைப் பற்றிக் கூறியுள்ளார். அந்த நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “லியோ திரைப்படத்தில் எனக்குப் பிடித்த ஒரு காட்சி என்றால், அது விஜய் சார், திரிஷாவிடம், எனக்கும் லியோ தாஸிற்கும் சம்பந்தமே இல்லை என கெட்டவார்த்தை பேசி நடிக்கும் காட்சிதான். அது ஒரு 6 நிமிட காட்சி, அதை முதல் டேக்கில் நான் ஓகே சொல்லிவிட்டேன்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அந்த நேர்காணலில் பேசியிருந்தார்.
இதையும் படிங்க : LCU-வில் கூலி படம் இல்லை.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!
லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்து பேசிய வீடியோ :
#LokeshKanagaraj Recent
– My favorite moment in the entire #LEO movie is the 6-minute scene where #Vijay convinces #Trisha.
– He absolutely nailed it in a single take.#ThalapathyVijay | #JanaNayaganpic.twitter.com/kDrSzpCbdz— Movie Tamil (@MovieTamil4) July 26, 2025
தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் ;
கடந்த 2023ம் ஆண்டு தளபதி விஜய்யின் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் லியோ. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது முற்றிலும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் அதிரடி ஆக்ஷன் போன்ற வித்தியாசமான கதைக்களத்தில் இப்படமானது வெளியாகியிருந்தது. இப்படமானது வெளியாகி சுமார் ரூ.600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இப்படத்தின் பாடல்கள் முதல் காட்சிகள் வரை ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.