Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ashwath Marimuthu: ஹீரோவாக நான் ரெடி.. அஸ்வத் மாரிமுத்து போடும் கண்டிஷன்!

Director Ashwath Marimuthu : டிராகன் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவரின் இயக்கத்தில் STR 51 படமானது உருவாக்கவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், அந்த நடிகர் இயக்கினால் அந்த படத்தில் நாயகனாக நடிக்கத் தயார் எனக் கூறியுள்ளார். அந்த நடிகர் யாரை என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

Ashwath Marimuthu: ஹீரோவாக நான் ரெடி.. அஸ்வத் மாரிமுத்து போடும் கண்டிஷன்!
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 26 Jul 2025 07:30 AM

தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே (Oh my kadavule) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu). இவரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், வாணி போஜன் மற்றும் ரித்திகா சிங் என பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். முதல் படத்தின் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமான இவரின் இயக்கத்தில், இறுதியாக வெளியான திரைப்படம் டிராகன் (Dragan). நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) நடிப்பில் கடந்த 2025ம் பிப்ரவரி மாதத்தில் இப்படம் வெளியானது. இந்த படமானது எதிர்பார்த்ததை விடவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக நடிகர் சிலம்பரசனுடனும் (Silambarasan) புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், பிரபல நடிகர் ஒருவர் படம் இயக்கினால் அந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதற்குத் தயார் என்று கூறியுள்ளார்.

அந்த நடிகர் வேறு யாருமில்லை, நடிகர் கே. மணிகண்டன்தான் (K. Manikandan). குடும்பஸ்தன், குட் நைட் மற்றும் லவ்வர் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தியிருக்கிறார். இவர் பீட்சா 2 படத்தில் எழுத்தாளராகவும் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், பாராட்டவும் வைத்தது – மாரீசன் படத்தை புகழ்ந்து பேசிய கமல் ஹாசன்!

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மணிகண்டன் குறித்து பேச்சு :

சமீபத்தில் நடிகர் மணிகண்டன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இணைந்து நேர்காணலில் கலந்துகொண்டனர். அந்த நேர்காணலில் அஸ்வத் மாரிமுத்திடம் என நீங்கள் நடிகராக வேண்டுமென நினைக்கவில்லையா என கேட்டிருந்தார். அதற்கு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ” ஏன் சார்” எனக் கேட்டிருந்தார். இந்நிலையில் உடனிருந்த நடிகர் மணிகண்டன், “ஏன் இப்படி கேட்கிறீர்கள் அவர்தான் படத்தில் நடித்திருக்கிறாரே” எனக் கூறியிருந்தார். அதற்கு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “ஆமாம், படத்திலும் நடித்திருக்கிறேன், குறும்படத்தில் நடித்திருக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

மேலும் பேசிய நடிகர் மணிகண்டன், ” உண்மையிலே நல்ல நடிகர்” அவர் எனப் பேசினார். அப்போது பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து “மணிகண்டன் படத்தை இயக்கினால் அதில் ஹீரோவாக நடிக்கிறேன், அவ்வையார் போன்ற கதை இருந்தால் அதில் நடிக்கலாம்” எனக் கூறினார், அதற்கு உடனே நடிகர் மணிகண்டன், “நிச்சயம் பண்ணலாம் தலைவா” எனப் பேசியிருந்தார். இது குறித்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : 10 வருடங்களுக்குப் பின் சினிமாவில் களமிறங்கும் நடிகர் அப்பாஸ்!

மணிகண்டன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து பேசிய வீடியோ :

அஸ்வத் மாரிமுத்தை STR51 திரைப்படம் :

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து டிராகன் படத்தின் வெற்றியை அடுத்ததாக சிலம்பரசனின் 51வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ப்ரீ – ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த புதிய படமானது STR 51 என அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.