Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், பாராட்டவும் வைத்தது – மாரீசன் படத்தை புகழ்ந்து பேசிய கமல் ஹாசன்!

Actor Kamal Haasan: நடிகர்கள் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு நடிப்பில் தற்போது ஹ்டிரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் மாரீசன். இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் கமல் ஹாசன் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், பாராட்டவும் வைத்தது – மாரீசன் படத்தை புகழ்ந்து பேசிய கமல் ஹாசன்!
கமல் ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Jul 2025 16:14 PM

நடிகர்கள் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மாரீசன். இந்தப் படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். இவர் மலையாள சினிமாவில் படங்கள் மற்றும் சீரியல்களை இயக்கியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வருகின்ற 25-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஃபகத் பாசில் (Actor Fahadh Faasil) மற்றும் வடிவேலு (Actor Vadivelu) உடன் இணைந்து நடிகர்கள் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா, ஸ்ரீநிவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னதாக மாமன்னன் படத்தில் நடிகர்கள் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து நடித்தது வரவேற்பைப் பெற்ற நிலையில் மீண்டும் இவர்கள் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளதை பார்க்க ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்தின் பிரிவியூ காட்சியைப் பார்த்த நடிகர் கமல் ஹாசன் படத்தையும் படக்குழுவினரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து நடிகர் கமல் ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மிகச்சிறந்த படைப்பு மாரீசன் – கமல் ஹாசன்:

அதன்படி நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, மாரீசன் படத்தைப் பார்த்தேன் – இது நகைச்சுவைக்கும் ஆழத்திற்கும் இடையில் சிரமமின்றி நடனமாடும் ஒரு படம், என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், அதன் கைவினைப்பொருளைப் பாராட்டவும் வைத்தது.

இந்த மகிழ்ச்சிகரமான படைப்பிற்காக அவர்களை வாழ்த்த குழுவினருடன் ஒரு அற்புதமான உரையாடலை மேற்கொண்டேன். அதன் நகைச்சுவையின் கீழ் மனித உணர்ச்சியின் மீது சமூக உணர்வுள்ள லென்ஸும், நமது சமூகத்தின் இருண்ட நிழல்கள் மீதான கூர்மையான பார்வையும் உள்ளது.

பார்வையாளராகவும் படைப்பாளராகவும் நான் இயல்பாகவே ஈர்க்கும் ஒரு வகையான புதுமையான, உற்சாகமான சினிமா என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இது தற்போது படக்குழுவினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read… இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான நடிகை சமந்தா? இணையத்தில் வைரலாகும் தேதி!

இணையத்தில் கவனம் பெறும் கமல் ஹாசனின் எக்ஸ் தள பதிவு:

Also Read… கூலி படத்தில் ரஜினி சாரை வில்லனாக நடிக்க வைப்பதே முதல் ப்ளான் – லோகேஷ் கனகராஜ் சொன்ன விசயம்