Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Maareesan : அருமையான பயணத்தில்… வடிவேலு – ஃபகத் பாசிலின் ‘மாரீசன்’ படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ!

Maareesan Movie X Reviews : மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள திரைப்படம் மாரீசன். ஃபகத் பாசில் மற்றும் வடிவேலுவின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ளது இந்த மாரீசன் படம். இப்படத்தின் பிரீமியர் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் குறித்துப் பார்க்கலாம்.

Maareesan : அருமையான பயணத்தில்… வடிவேலு – ஃபகத் பாசிலின் ‘மாரீசன்’ படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ!
மாரீசன் திரைப்படம் X விமர்சனம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Jul 2025 19:27 PM

நடிகர்கள் ஃபகத் பாசில் (Fahadh Faasil) மற்றும் வடிவேலுவின் (Vadivelu) கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாரீசன் (Maareesan). இந்த படத்தை மலையாள பிரபல இயக்குநர் சுதீஷ் சங்கர் (Sudheesh Sankar) இயக்கியுள்ளார். இவர் இந்த படத்தின் மூலமாகத்தான் தமிழில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் நடிகர் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்து அசத்தியிருக்கின்றனர். இந்த மாரீசன் படத்திற்குத் தமிழ் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை சூப்பர்குட் மூவிஸ் மற்றும் ஏ.பி இன்டெர்னேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது, கொள்ளை, காமெடி, எமோஷனல் மற்றும் பயணம் என மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

இந்த படமானது திரையரங்குகளில் வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பிரீமியர் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான எக்ஸ் விமர்சனங்கள் குறித்துப் பார்க்கலாம். நடிகர்களின் நடிப்பு, இயக்குநரின் கதை என முழு படத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், பாராட்டவும் வைத்தது – மாரீசன் படத்தை புகழ்ந்து பேசிய கமல் ஹாசன்!

மாரீசன் திரைப்படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் :

மாரீசன் படமானது ஒரு அற்புதமான, மனதைத் தொடும் பயணமாக உள்ளதாம். இப்படத்தில் நடிகர் ஃபகத் பாசிலின் நயவஞ்சகமான உயிரோட்ட நடிப்பு, மற்றும் நடிகர் வடிவேலுவின் நடிப்பே மிகவும் அருமையாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் முதல் பாதி மெதுவாகத் தொடங்கியிருந்தாலும், இரண்டாம் பாதிக்கு இணையாக உள்ளதாம். மேலும் இந்தப் படத்தின் இரண்டாம் பாதி மிகவும் வித்தியாசமான பல திருப்பங்களுடன், எமோஷனல் காட்சிகள் நிரம்பியுள்ளதாம். நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

வடிவேலு மற்றும் ஃபகத் பாசிலின் கூட்டணி எப்படி :

 

மாரீசன் படத்தின் கதையானது நல்ல கதையும், வித்தியாசமான திருப்பங்களுடன் அமைந்துள்ளதால். மேலும் இறுக்கத்துடன் முதல் பாதியும் மற்றும் எமோஷனல் மிகுந்த காட்சிகளுடன் இரண்டாம் பாதி படமும் அமைந்துள்ளதால், ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு காம்போ தங்களின் தனித்துவமான கேரக்டர்ஸை பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வேட்டையன் படத்தில் பேட்ரிக் ரோல் இப்படிதான் கிடைத்தது – ஃபகத் பாசில் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பு :

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் நிலையில், இப்படத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி அருமையாக இருக்கிறதாம் இந்த கதையுடன் இசையமைப்பும் ஒத்துப்போவதாகக் கூறப்படுகிறது. மேலும் யுவன் சங்கர் ராஜா தனது இசையால் படத்தை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

படத்தைத் திரையரங்கு சென்று பார்க்கலாம் :

வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது என கூறப்படுகிறது. மாமன்னன் படத்தில் இவர்கள் இருவரின் கூட்டணி எவ்வாறு இருக்கிறதோ, அதற்கு முற்றிலும் வித்தியாசமாக இப்படத்தில் அமைத்துள்ளதாம். இந்தப் படமானது எமோஷனல், கொள்ளை, மனிதத்துவம் என மாறுபட்ட கதையில் உருவாகியுள்ளதாம். எமோஷனல், காமெடி மற்றும் வித்தியாசமான கதையை விரும்புபவர்கள் நிச்சயம் இப்படத்தைத் திரையரங்குகளில் சென்று பார்க்கலாம்.