Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகும் அவரது 100-வது படம்

Actor Vijayakanth: கோலிவுட் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரது 73-வது பிறந்த நாள் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் கொண்டாடப் பட உள்ளது. இந்த நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் நடிப்பில் 100-வதாக வெளியான படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகும் அவரது 100-வது படம்
விஜயகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Jul 2025 18:29 PM

தமிழ் சினிமாவில் கடந்த 1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை படத்தின் மூலம் நடிகரகாக அறிமுகம் ஆனார் விஜயகாந்த். இவர் இந்தப் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுகம் ஆன முதல் படம் வில்லன் கதாப்பாத்திரம் என்றாலும் அதனைத் தொடர்ந்து பல நூறு படங்களில் நாயகனாக கலக்கியுள்ளார். இவரை ரசிகர்கள் விஜயகாந்த் என்று அடையாளப்படுத்தியதை விட கேப்டன் என்றே அதிகமா அழைத்துள்ளனர். ரசிகர்கள் மட்டும் இன்றி சினிமா வட்டாரங்களில் உள்ள பிரபலங்களை விஜயகாந்தை கேப்டன் என்றே அடையாளப்படுத்தியுள்ளனர். சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிய இவர் தமிழக அரசியலிலும் தனது சிறப்பான பங்கை ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளைப் போல இவர் உயிரிழந்த பிறகும் இவரை தமிழக மக்கள் நினைக்காமல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் விஜயகாந்தின் 73-வது பிறந்த நாள் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவரது நடிப்பில் 100-வதாக வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஜயகாந்த் நடிப்பில் 100-வதாக வெளியான கேப்டன் பிரபாகரன்:

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கேப்டன் பிரபாகரன். இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கி இருந்தார். இதில் நடிகர் விஜயகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் எம்.என்.நம்பியார், சரத்குமார், ஜே.லிவிங்ஸ்டன், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், காந்திமதி, யுவஸ்ரீ, பீலி சிவம், வி.எம்.ஜான், மன்சூர் அலிகான், பொன்னம்பலம், எல்ஐசி நரசிம்மன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

Also read… என் அண்ணன் எல்லாத்தையும் பாத்துபாருனு அப்போ நம்புனேன்… சூர்யா குறித்து நெகிழ்ந்து பேசிய கார்த்தி!

நடிகர் விஜயகாந்த் இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியான போது இதனை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர் என்றே சொல்லாம். இந்த நிலையில் படம் மீண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் கவனம் பெறும் ட்விட்டர் பதிவு:

Also read… அரசியலில் களமிறங்குவது குறித்து விஜய் சொன்ன விசயம்… நடிகர் ஷாம் ஓபன் டாக்!