அப்பா பாத்து எனக்கு ஓகே சொன்ன படம்… விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன்!
Actor Shanmuga Pandiyan: நடிகர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகர் அவரது தந்தையின் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதே போல நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிகராக தற்போது கோலிவுட் சினிமாவில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகர் விஜயகாந்த் (Vijayakanth). இவர் நடிகராக மட்டும் இன்றி அரசியல் தலைவராகவும் தமிழ மக்களுக்காக பணியாற்றியிருந்தார். இவர் உயிருடன் இருந்த போது ரசிகரக்ள் எவ்வாறு கொண்டாடினார்களோ அதைவிட இவர் உயிரிழந்த பிறகு கொண்டாடுவதில் எந்த சந்தேகமும் இல்லை. விஜயகாந்த் மறைவிற்கு பிறகு கோலிவுட் சினிமாவில் வெளியான பல படங்களில் அவரது படங்களின் ரெஃபரன்ஸ்களும் பாடல்களும் அதிகம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதில் பல பாடல்கள் விஜயகாந்தின் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில் அது காப்பி ரைட்ஸ் சிக்கலிலும் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடித்த படை வீரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைப்பெற்றது. அதில் சண்முகப் பாண்டியன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படம் சகாப்தம். 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்குநர் சுரேந்தர் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு மதுர வீரன் படத்தில் நடித்தார் நடிகர் சண்முகப் பாண்டியன். இந்தப் படத்தை இயக்குநர் முத்தையா இயக்கி இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சண்முகப் பாண்டியனின் படைத் தலைவன் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் அன்பு எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
சண்முகப் பாண்டியனின் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
இந்தப் படத்தில் நடிகர் சண்முகப் பாண்டியன் உடன் இணைந்து கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், முனிஷ்காந்த், கருடன் ராம், ரிஷி, ஏ.வெங்கடேஷ், யுகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள் தாஸ், லோகு என்.பி.கே.எஸ் என பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படம் வருகின்ற மே மாதம் 23-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் சண்முகப் பாண்டியன் இந்தப் படத்தின் கதையை தனது தந்தை விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே கேட்டு ஓக்கே சொன்ன படம் என்று தெரிவித்தார். மேலும் இந்தப் படத்தில் வரும் இரண்டு சண்டைக் காட்சிகளை விஜயகாந்த் முன்னதாகவே பார்த்து சிறப்பாக உள்ளது என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.