வேட்டையன் படத்தில் பேட்ரிக் ரோல் இப்படிதான் கிடைத்தது – ஃபகத் பாசில் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
Fahadh Faasil: நடிகர் ஃபகத் பாசில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் மலையாளத்தில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மலையாள சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் நடிகர் ஃபகத் பாசில் (Fahadh Faasil) அவ்வபோது தென்னிந்திய சினிமாவில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ஃபகத் பாசில் இறுதியாக தமிழில் நடித்தப் படம் வேட்டையன். சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இந்தப் படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கி இருந்தார். இவர் முன்னதாக ஜெய் பீம் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகர் ஃபகத் பாசில் சைபர் பேட்ரிக் என்ற பேட்டரி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த கதாப்பாத்திரம் சைபர் கொள்ளைகளில் ஈடுபடும் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ஃபகத் பாசில் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வேட்டையன் படத்தில் பேட்ரிக் ரோலில் நடிக்க என்ன காரணம்?
இந்த நிலையில் நடிகர் ஃபகத் பாசில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வேட்டையன் படத்தில் பேட்ரிக் கதாப்பாத்திரம் எப்படி அமைந்தது என்பது குறித்து பேசியுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி ஃபகத் பாசில் பேசியுள்ளதாவது முதலில் இயக்குநர் ஞானவேல் இந்தப் படத்தில் வேறு ஒரு கதாப்பாத்திரத்திற்காவே என்னை அனுகினார்.




நான் படத்தின் கதை முழுவதுமாக கேட்டேன். பிறகு நான் பேட்டரிக் ரோல் தான் எனக்கு பிடித்து இருக்கு அதுதான் நான் செய்தால் சரியாக இருக்கும் என்று கூறி பிறகு அந்த கதாப்பாத்திரத்தில் நடித்தேன் என்று ஃபகத் பாசில் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் வேறு என்ன கதாப்பாத்திரம் அந்த படத்தில் நடிக்க இயக்குநர் கேட்டு இருப்பார் என்ற விவாதமும் சமூக வலைதளத்தில் எழுந்துள்ளது.
Also Read… இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான நடிகை சமந்தா? இணையத்தில் வைரலாகும் தேதி!
தமிழில் ஃபகத் பாசில் அறிமுகனாது எப்போது?
கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வெளியான வேலைகாரன் படத்தில் கார்பரேட் வில்லனாக நடிகர் ஃபகத் பாசில் நடித்து இருந்தார். இந்த கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் ஃபகத் பாசில் தமிழில் சூப்பர் டீலக்ஸ், மாமன்னன், வேட்டையன் படத்தை தொடர்ந்து தற்போது மாரீசன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மாரீசன் படத்தில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ஃபகத் பாசில் நடித்துள்ளார். படம் நாளை 25-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் படத்தின் பிரிவியூ காட்சிகளை பார்த்தவர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
மாரீசன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
FAFA is out now! 🎧💥 Tap the link and let the vibe take over! https://t.co/rcMwFuWwnR #supergoodfilms #maareesan #rbchoudary #apinternational #e4entertainment #fahadhfassil #listennow pic.twitter.com/jNIpP0KJIU
— Super Good Films (@SuperGoodFilms_) July 9, 2025
Also Read… ஹே மின்னலே… இணையத்தில் கவனம் பெறும் சாய் பல்லவியின் இன்ஸ்டா போஸ்ட்!