Lokesh Kanagaraj : இரும்பு கை மாயாவி படத்திற்காக சூர்யாவை நிராகரித்தேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்!
Lokesh Kanagaraj About Irumbu Kai Maayavi Movie : இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முன்னணி இயக்கத்தில் ரிலீசிற்கு கடத்திருக்கும் படம் கூலி. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர் அமீர்கானுடன் புதிய படத்தையும், சூர்யாவை வைத்து படம் இயக்கவிருந்தது பற்றியும் தவறாகப் பேசப்படும் நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

கோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் லியோ (Leo) படத்தைத் தொடர்ந்து, ரிலீசிற்கு தயாராகியிருக்கும் படம் கூலி (Coolie) . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் இந்த திரைப்படமானது உருவாகியிருக்கிறது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பான் இந்திய நடிகர்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார்.
அதில் சூர்யாவை (Suriya) நிராகரித்து, அமீர்கானுடன் (Aamir Khan) இரும்பு கை மாயாவி (Irumbu Kai Maayavi) படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். இரும்பு கை மாயாவி படத்தை அமீர்கானை வைத்த இயக்கவில்லை என அவர் கூறியிருக்கிறார். அவர் பேசியது குறித்து தெளிவாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : கூலி படத்தில் ரஜினிகாந்த்தின் மகள் இல்லை.. தனது கதாபாத்திரம் குறித்து ஸ்ருதி ஹாசன் விளக்கம்!
அமீர்கானுடன் புதிய படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேச்சு :
அந்த நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “இப்போது எல்லாரும் நான் இரும்பு கை மாயாவி படத்தைத்தான், நான் அமீர்கான் சாருடன் பண்ணுகிறேன். சூர்யா சாருடன் அந்த படம் பண்ணுகிறேன் என சொல்லிவிட்டு, பண்ணவில்லை என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை, நான் சுமார் 10 வருடங்களுக்கு முன்னே இரும்பு கை மாயாவி படத்தின் கதையை எழுதிவிட்டேன். நான் அந்த படத்தின் கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக, சமீபத்தில் நான் இயக்கிய படங்களில் பயன்படுத்திவிட்டேன்.
இதையும் படிங்க : பெரும் வரவேற்பு.. ‘தலைவன் தலைவி’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
இரும்புக்கை மாயாவி படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசிய வீடியோ :
“Many thought I’m going to do #IrumbukaiMayavi with #Aamirkhan sir, ignoring #Suriya sir🤞. It’s not like that. I wrote it 10 yrs back & many films came now, resembling important scene of IKM🙁. Now I’m rewriting it & came like new Action Film🤝”
– #Lokesh pic.twitter.com/WB6w8WL1mU— AmuthaBharathi (@CinemaWithAB) July 26, 2025
இரும்பு கை மாயாவி படத்தின் கதையிலிருந்த முக்கியமான விஷயங்கள் எல்லாம், அந்த படங்களில் போய்விட்டது. இப்போது போன விஷயங்களை எல்லாம் தவிர்த்து, இரும்பு கை மாயாவி படத்தை எடுத்தால், அது முற்றிலும் வேறு ஒரு திரைப்படமாக இருக்கும். இதுதான் உண்மை. இரும்பு கை மாயாவி படம் முற்றிலும் ஆக்ஷ்ன் திரைப்படம்தான், ஆனால் கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தைத் தாண்டி வித்தியாசமாக அந்த படம் இருக்கும்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த தகவலானது சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.