வழக்கமான அதே டெம்லேட் உடன் சித்தர்களின் சக்தியும் இணைந்து உருவானது மார்கன் – அமேசானில் வெளியான படம் எப்படி இருக்கு?
Maargan Movie: கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக பல ஹிட் படங்களை கொடுத்த விஜய் ஆண்டனி தற்போது நாயகனாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான மார்கன் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

நடிகர் விஜய் ஆண்டனி (Actor Vijay Antony) நட்டிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மார்கன். சைக்கோ த்ரில்லர் கதையை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தை இயக்குநர் லியோ ஜான் பால் எழுதி இயக்கி இருந்தார். இந்த மார்கன் படம் இவர் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகர்கள் அஜய் திஷன், பி.சமுத்திரக்கனி, சேஷ்விதா ராஜு, தீப்ஷிகா, அர்ச்சனா, மகாநதி சங்கர், பிரிஜிடா சாகா, வினோத் சாகர், அபிஷேக் வினோத், குமார் நடராஜன், ராமச்சந்திரன் துரைராஜ், அஜித் கோஷி, சூப்பர் சுப்ரமணி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் கடந்த 27-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி மீரா விஜய் ஆண்டனி அவர்கள் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் என்ற பேனரின் கீழ் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




விஜய் ஆண்டனியின் மார்கன் படத்தின் கதை என்ன?
வழக்கமான சைக்கோ கொலை சம்பந்தப்பட்ட படங்களில் காட்சியமைப்பது போல படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு பெண் சைக்கோ கொலையாளியால் மர்மனாக ஊசி ஒன்றை போடப்பட்டு உயிரிழக்கிறார். அந்த ஊசி போட்ட உடனே பெண்ணின் உடல் கருகி அங்கையே அவர் உயிரிழக்கிறார்.
அவரின் உடலை அந்த சைக்கோ கொலையாளி வேறு ஒரு இடத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போடுகிறார். காலையில் துப்புறவு தொழிலாளிகள் குப்பைகளை சுத்தம் செய்ய வரும்போது அந்த குப்பை தொட்டியில் இருக்கும் பெண்ணின் உடலைப் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளிக்கின்றனர்.
Also Read… படம் நல்லா இல்லனாலும் பெரிய நடிகர் நடிச்சா கமர்ஷியல் படம் ஹிட் அடிக்கும் – லோகேஷ் கனகராஜ்!
இந்த நிலையில் மும்பையில் காவல் துறை அதிகாரியாக இருக்கும் விஜய் ஆண்டனி இந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைகிறார். காரணம் அவரது ஒரே மகள் மும்பையில் இந்த ஊசி போடப்பட்டு கருகிய நிலையில் இறந்து இருப்பார். இதனைத் தொடர்ந்து சென்னையிலும் அப்படி ஒரு பெண் உயிரிழந்து இருப்பதால் அந்த வழக்கை விசாரிக்க சென்னை வருகிறார் விஜய் ஆண்டனி.
அதனைத் தொடர்ந்து அந்த வழக்கின் விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே மற்றொருவரும் அதே மாதிரி உடல் கருகி இறந்துவிடுகிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரியாக இருக்கும் விஜய் ஆண்டனி அந்த சைக்கோ கொலையாளியை எப்படி கண்டுபிடித்தார் என்பதே படத்தின் கதை.
மார்கன் படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
— vijayantony (@vijayantony) July 13, 2025
Also Read… இரண்டாவது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்… வைரலாகும் புகைப்படங்கள்