பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த ஜி.வி.பிரகாஷ் குமாரின் அடங்காதே படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ!
Adangathey Movie: இசையமைப்பாளராக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.அந்த வகையில் சுமார் 8 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ திரைப்படம் தற்போது வெளியீட்டிற்காக தயாராகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பின்பு தென்னிந்தியா முழுவது இசையமைப்பாளராக பிரபலம் ஆனவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவர் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து வந்தாலும் அவர் மற்ற படங்களுக்கு இசையமைக்கும் பணிகளை நிறுத்தவில்லை. நடிப்பின் மூலமாகவும் இசையின் மூலமாகவும் தொடர்ந்து தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கிங்ஸ்டன். இதில் நடிகை திவ்ய பாரதி நாயகியாக நடித்து இருந்தார். கடலையும் கடலை சுற்றி வாழும் மக்களின் வாழ்க்கையையும் மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷின் இட்லி கடை மற்றும் சூர்யாவின் 46 படங்களுக்கு இசையமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவான அடங்காதே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.




அடங்காதே படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
அதன்படி இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தயாரான படம் அடங்காதே. இந்தப் படத்தில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் சுரபி, சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, பிளேட் சங்கர், திருமுருகன், யோகி பாபு, சுனில் தாபா, அபிஷேக், போஸ்டர் நந்தகுமார் என பலர் இந்தப் படத்தில் நடித்ஹ்டுள்ளனர்.
மேலும் இந்தப் படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைதுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் ட்ரெய்லர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே வெளியான நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… Vijay Deverakonda: சூர்யாவின் மேல் இருக்கும் அன்பு.. விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்!
அடங்காதே படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குநர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
மக்களுக்கான அரசியலை பேச கற்றுக்கொடுத்த என் பேராசான் மணிவண்ணன் அவர்களுக்கு நன்றி 🙏🏻 @gvprakash @realsarathkumar @iYogiBabu @Surbhiactress @mandybedi @srigreen_pro @onlynikil @tuneyjohn @vivekharshan #ThambiRamiah @bladeshankar #Thirumurugan pic.twitter.com/fKh3ZFvsnD
— Shanmugam Muthusamy (@shan_dir) July 27, 2025
Also Read… Lokesh Kanagaraj: LCU-வில் கூலி படம் இல்லை.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!